Thanks to Brother Abdul Rahman for his excellent article for children
1. அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி
அனஸ் இப்னு நழ்ரு என்பது அவருடைய பெயர்.மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர்.இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும்.ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது.பத்ருப் போரில் கலந்து கொள்ளாததை மிகப்பெரிய இழப்பாக அவர் கருதினார்.எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இறைநம்பிக்கை எப்படிப்பட்டது என்று கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவேன் என்று அவர் அடிக்அடி கூறுவது வழக்கம்!இப்படிப்பட்ட நேரத்தில்தான் உஹதுப் போருக்கான அழைப்பு வந்தது.முஸ்லிம்கள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானார்கள்;.அனஸ் இப்னு நழ்ரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்.அவரும் ஸஅது இப்னு அபி வக்காஸூம் ஒன்றாகச் சேர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.சற்று தூரத்தில் எதிரிகளோடு முஸ்லிம்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்.நடந்து கொண்டிருந்த அனஸ் சட்டென்று நின்றார்.ஷஷஸஅத்! சொர்க்கத்தின் வாசம் வீசுகின்றதா?சொர்க்கத்தின் வாசத்தை நீ உணரவில்லையா?அனஸ் என்ன சொல்கிறார் என்று ஸஅதுக்கு உடனேபுரியவில்லை.ஷஷஅதோ! உஹது மலைக்குப் பின்னால் இருந்து சொர்க்கத்தின் வாசம் வீசுவதை நான் உணர்கிறேன்! என்று அனஸ் கூறினார்.கூறியவர் அங்கேயே வெறுமனே நின்று கொண்டிருக்கவில்லை.தன்னுடைய வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் பாய்ந்துவிட்டார்.எதிரிகளோடு மிகவும் வீரதீரத்தோடு போரிட்டார்.ஷஷஇவரைப் போல இன்னொரு வீரர் யார் இருக்க முடியும்?என்று எல்லோரையும் கேட்க வைத்தார்.ஷஹீதாகத் தயாரானவர்தானே சொர்க்கத்திற்கு ஆசைப்பட முடியும்?ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா? இன்றைக்கு யார்யாரையோ ஷஹீத் என்று சொல்லி விடுகிறார்கள்.அவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஷஹீத்கள்தானா என்பதை இறைவன் தான் அறிவான்.இ;ஸ்லாமுக்காக வாழத் துணிந்தவன் தான் சாகவும் துணிவான்.அல்லாஹ் காட்டிய வழிமுறைகளின்படி வாழ்ந்து காட்டுபவனால்தான் அல்லாஹ் கூறிய முறைப்படி சாகவும் முடியும்.எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்த அனஸின் உடலில் ஏராளமான காயங்கள் ஏற்பட்டன.எதிரிப்படை வீரர்கள் பலபேரை அவர் வீழ்த்தினார். அவருடைய உடல் எங்கும் காயங்கள்: காயங்கள்!ஒன்றுஅல்ல, இரண்டுஅல்ல, என்பத்தி இரண்டு காயங்கள் அவருடைய உடலில் இருந்தன.அவருடைய உடல் தளர்ந்தது: உயிர்மூச்சு ஓய்ந்தது.இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன் போர் முடிந்துவிட்டது.இஸ்லாமுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்கள் எல்லாம் ஷஹீதுகளாக கீழே வீழ்ந்து கிடக்கிறார்கள்;.தன்னுடைய சகோதரனுடைய நிலை என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று கவலையோடு அனஸூடைய சகோதரி ருபய்யிஃ போர்க்களத்திற்கே வந்துவிட்டார்;.ஒவ்வொரு சடலமாக பார்த்துக் கொண்டே வருகிறார்.அனஸைக் காணவில்லை. மீண்டும் உன்னிப்பாக ஒவ்வொரு சடலத்தையும் பார்க்கிறார்.அனஸ் எங்கே விழுந்து கிடக்கிறார் என்றே அடையாளம் தெரியவில்லை.ஓரிடத்தில் உயிரற்ற உடல் ஒன்று கிடக்கின்றது.பார்த்தால் அனஸ் போலவே தெரிகின்றது.ஆனால், முகம் முழுக்க வெட்டுக் காயங்கள்.ஆள் யார் என்றே அடையாளம் சொல்ல முடியாது.அனஸ்தான் இது என்று அவருடைய உள் உணர்வு சொல்கின்றது.அந்த உடலின் கைகளைத் திருப்பிப் பார்த்தார்.அல்லாஹூஅக்பர்!! ஆம், அனஸேதான் இது!! அனஸ் ஷஹீதாகிவிட்டார்;.அனஸ் வெற்றி பெற்றுவிட்டார்.அனஸ்; அல்லாஹ்வோடு செய்த வாக்குறுதியை முழுமையாக்கி விட்டார்.அதுமட்டுமல்ல, வான்மறை குர்ஆனிலும் இடம் பெற்றுவி;ட்டார்.அல்லாஹூ அக்பர்.அல்லாஹ்விடம் தாங்கள் செய்துகொண்ட வாக்குறுதியை உண்மையாக்கி விட்டவர்கள் முஃமின்களில் இருக்கிறார்கள். ஒருசிலர் தங்களுடைய நேர்ச்சையை முழுமையாக்கி விட்டார்கள்: இன்னும் சிலரோ, அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33;:23)
2. சொத்தும் வேண்டாம்: சுகமும் வேண்டாம்!
ஸூஹைப் என்பது அவருடைய பெயர். அப்லா என்ற ஊரில் அவருடைய தந்தை பாரசீக நாட்டின் அதிகாரியாக இருந்தார்.ஒருமுறை ரோம நாட்டினர் அந்த ஊரின் மீது படை எடுத்தார்கள்.பாரசீக நாட்டுப் படையைத் தோற்கடித்து ஸூஹைபை கைதியாக பிடித்துக் கொண்டார்கள்.மக்கா மாநகரில் அடிமையாக ஸூஹைபை விற்றுவிட்டார்கள்.பின்னர் எப்படியோ ஒருவழியாக விடுதலையாகி அங்கேயே வாழ்ந்து வந்தார்.தங்க நகைகள் செய்யும் தொழிலை செய்து வந்தார்.புகழ்பெற்ற ஆசாரியாக மாறிவிட்டார்.ஏராளமான செல்வத்திற்கும் சொத்துக்களுக்கும் சொந்தக் காரராக மாறினார்.இஸ்லாமியப் பிரச்சாரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் ஆரம்பித்தபோது அதுதான் சத்தியம் என்பதை உணர்ந்து எற்றுக் கொண்டார்.முஸ்லிமாக மாறிவிட்டார்.மக்கா நகரத்து மக்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடவில்லை.தொந்தரவுகளையும் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.முஸ்லிம்களாக வாழவேண்டுமென்றால் அடி உதைகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையே நிலவியது.எத்தனை நாளுக்குத்தான் கஷ்டங்களையும் அடி உதைகளையும் தாங்கிக் கொண்டு இருப்பது?முஸ்லிம்கள் வசிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கினர்.முதலில் அபிசீனியாவுக்கு சென்றார்கள்.பிறகு, மதீனாவுக்குக் கிளம்பினார்.ஸூஹைபும் மதீனாவுக்குக் கிளம்பினார்.தன்னுடைய எல்லா சொத்துக்களையும் விற்று மூட்டையாகக் கட்டிக் கொண்டார்.ஒட்டகத்தின் மீது சாமான் செட்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிட்டார்.மக்கா நகரைத் தாண்டி மதீனா நகரை நோக்கி போகலானார்.திடீரென்று குதிரைகளின் குளம்பு ஒலி கேட்டது.அவரை நோக்கி வெகுதூரத்தில் பல குதிரைகள் வந்துகொண்டிருந்தன.இதோ, குதிரைகள் அவரை நெருங்கி வந்து நின்றுகொண்டன.ஷஷஎங்கே போகிறீர்கள் ஸூஹைப்? என்று வந்தவர்களில் ஒருவன் ஸூஹைபைப் பார்த்துக் கேட்டான்.ஷஷநானா? நான் மதீனாவுக்குப் போய்க் கொண்டுள்ளேன்!நான் முஸ்லிமாக வாழ விரும்புகிறேன்.என்னால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.ஆகையால் தான் மதீனாவுக்குக் கிளம்பி விட்டேன்.என்றார் ஸூஹைப்.ஷஷஅப்படியா! அப்படியென்றால் இந்த சொத்துகளை எல்லாம் இங்கேயே இறக்கி வைத்துவிட்டுச் செல்!-என்றான் இரண்டாவதாக இன்னொருவன்.ஒன்றும் புரியாமல் அவனையே உற்றுப் பார்த்தார் ஸூஹைப்.ஷஷஎன்ன நான் சொல்வது உனக்கு விளங்கவில்லை?நீ ஓர் அடிமையாக எங்கள் ஊருக்கு வந்தாய்.இங்கேயே தொழிலைக் கற்றுக் கொண்டாய்.ஏராளமான பணங்காசுகளை சம்பாதித்தாய்.இப்போது எங்கள் சமயத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளாய்.நீ சம்பாதித்த காசெல்லாம் எங்களுடையவை.எங்களுக்கே சொந்தமானவை.எங்கள் மதத்தைப் பின்பற்றுவதாக இருந்தால் இவ்வளவு சொத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு எங்களுடனேயே இருந்துவிடலாம்.இல்லை, மதீனாவுக்குப் போவதாக இருந்தால் எங்கள் ஊரில் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போ!!---என்றார்கள் வந்தவர்கள் அத்தனைபேரும்!!ஒரு நிமிடம் நின்றார் ஸூஹைப்.அவர்கள் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டுப் பார்த்தார்.கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார்:இதோ! இந்த இனைத்து சொத்துகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.ஷஷநான் ஒருக்காலும் என்னுடைய சமயத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக மாட்டேன்.வெட்டுஒன்று துண்டுஇரண்டு என்பதைப்போல தெளிவாக தன்னுடைய கருத்தை கூறிவிட்டார்.அவருடைய சொத்துகளை எல்லாம் அந்தக் காஃபிர்கள் பறித்துக் கொண்டார்கள்.வெறுங்கையோடு ஸூஹைபை அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டடார்கள்.ஆனால், உள்ளம் முழுக்க ஈமானை நிரப்பிக் கொண்டு ஸூஹைப் போனார்.அவருடைய கைகள் காலியாக இருந்தன.சொர்க்கமே அவருக்காக காத்துக் கொண்டு இருந்தது.நான் சம்பாதித்த பொருள்: இதைக் காட்டிக் காப்பது என்னுடைய உரிமை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.உரிமையை மீட்பதற்காக இஸ்லாமை இழந்துவிட அவர் தயாராக இல்லை.இஸ்லாமுக்குப் பதிலாக இந்த உலகமே கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து விடுபவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்! (அல்குர்ஆன் 2:207
No comments:
Post a Comment