Friday, August 22, 2008

சமூக நல்லிணகத்தை கெடுக்கும் இந்தியா டுடே

சமூக நல்லிணகத்தை கெடுக்கும் இந்தியா டுடே
-தமிழ் குடிமகன்
'சுரணையற்ற இந்தியா'இந்தியாவின் இறையாண்மையை இதைவிட அவமான கரமான வார்த்தை களால் யாரும் திட்ட முடியாது. பிரமாண்டமான பத்திரிக்கை பலம், ஆதிக்க சாதி என்னும் தேசிய அடை யாளம், இந்தியா டுடேவால் தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்பட்ட வாசகர் வட்டம் என்ற ரசிகர் கூட்டத்தின் பேராதரவு எல்லாம் ஒருங்கிணைந்து, தரம் கெட்ட வார்த்தையில் சொந்த தேசத்தின் தன்மானத்தை சொறிந்து பார்க்கும் தைரியத்தை இந்தியா டுடேவுக்கு தந்திருக்கிறது.இந்தியாவில் என்றில்லை, உலகில் எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கு ஒரு முஸ்லிம் தான் காரணமாக இருப்பான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்படி எழுதுவதற்கு இந்தியா டுடேவுக்கு முஸ்லிம்கள் மீது என்ன ஆத்திரம் வந்தது என்று பலர் நினைக்கக் கூடும்.
இஸ்லாம், முஸ்லிம், மதச்சார்பின்மை, இந்திய ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமை, சமய, சமூக சகிப்புத் தன்மை என்ற தேசிய இறையாண்மையின் உட்கூறு களை உடைத்து நொறுக்கி, தாங்கள் கொண்டு வர விரும்பும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அரசியலை மக்கள் மனதில் திணிப்பதே அவர்கள் பத்திரிக்கை பணிகளின் நோக்கம். இந்த இலக்கோடு அ(வ்)வாள்கள் பல பத்திரிக்கைகளை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.இந்த நோக்கத்துடன் துவங்கப்பட்ட மற்றுமொரு நாசகார வடிவம்தான் 'இந்தியா டுடே'. கணிசமான அளவு சமஸ்கிருதம் உள்ளிட்ட வட மொழி சொற்களை சிறுக சிறுக திணித்து எழுதுவது இந்தியா டுடேயின் எழுதப்படாத தீர்மானமாக இருப்பதைக் காணலாம். முஸ்லிம் விரோத மன நிலை (ஙண்ய்க் நங்ற்) கொண்ட பார்ப்பனிய பித்து பிடித்த எழுத்தாளர் களை பொறுக்கிக் கொண்டு வந்து எழுத வைப்பது அதன் பணி.முஸ்லிம்கள் சும்மா இருந்தால் இந்தியா டுடேவுக்கு எரிச்சலாக இருக்கும். ஏதாவது சில முஸ்லிம்கள் எங்காவது ஒரு பிழையைச் செய்ய வேண்டும். உடனே முஸ்லிம்களால் இந்தியாவுக்கு ஆபத்து. முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள், நாட்டுக்கு பாதுகாப்பில்லை, உயிர்களுக்கு உத்திரவாதமில்லை என்று கட்டுரைகளை எழுதி குவிக்கும்.பாதிக்கப்படும் நபர்களின் புகைப்படங் களை வண்ணங்களில் இட்டு இதற்கு முஸ்லிம்தான் காரணம் என்று உடனே எழுதுவது அதன் கலவர உத்தி. கோபம் உச்சந்தலைக்கு எகிறி பிற சமயத்தினர் பெரும் கோபத்துடன் முஸ்லிம்களை தாக்க வேண்டும். குஜராத்களை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அதன் எழுத்துத் திட்டம். அந்த இலக்கை எட்டும் வரை இந்தியா டுடே எழுதிக் கொண்டே இருக்கும்.ஒரு சம்பவம் நடந்ததுடன் அது குறித்து விசாரணை செய்ய காவல் துறையும், நீதி செலுத்த நீதிமன்றங்களும் உள்ளன. யாரும் கைது செய்யப்பட வில்லை. அத்தகைய நிலையிலேயே ஊடகங்கள் முஸ்லிம்களில் குற்றவாளி களைத் தேடுகின்றன. குண்டுகள் வெடிக்கும் சில நிமிடங்களில் எங்கிருந்தாவது ஒரு மின் அஞ்சல் இதற்கு பொறுப்பேற்கிறது. புதுப் பெயரில் ஒரு இயக்கமும் சொல்லப் படுகிறது. அதை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் குண்டு வைத்தார்கள் என்கின்றனர். இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் ஒரு இலிமெயில் அஹமதாபாத் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்பதாக இந்தியா டுடே எழுதுகிறது. அந்த இலிமெயில் ஆய்வு செய்யப்பட்டதில் அதன் சங்கிலித் தொடர் ஒரு அமெரிக்கனின் கம்ப்யூட்ட ரில் சென்று முடிகிறது என கூறப்பட்டது. பின்னர் அது குறித்து எந்த தகவலும் இல்லை.இதிலிருந்து, இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு, முஸ்லிம்கள் தலையில் பொறுப்பை சுமத்தும் சதி இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் செய்யப்படுவதை அறிய முடிகிறது. ஆக, அரபு எழுத்துக்களோடு அனுப் பப்பட்ட அந்த இலிமெயில் ஒரு முஸ்லிம் இடத்தில் இருந்து வரவில்லை என்பதை உளவுத்துறையும் அரசும் உணர்ந்து கொண்டது. அதுவே ஒரு முஸ்லிமின் கம்ப்யூட்டரில் முடிந்திருந் தால் அவனை பிடித்துக் கொண்டு வர இன்டர் போல் உதவி தேடப்பட்டிருக் கும். ஆக, அகமதாபாத் குண்டு வெடிப்பை முஸ்லிம்களோடு தொடர்பு படுத்திய முதல் கூறான இலிமெயில் அக்குற்றச்சாட்டில் இருந்து முஸ்லிம் களை விடுவிக்கிறது. ஆனால், எந்த அடிப்படை ஆதாரமுமின்றி தியோபந்தி (தேவ்பந்த்) மதரஸாவின் மௌலவி அப்துல் ஹலீமை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த கைது ஏதோ ஒருவகையில் குண்டு வெடிப்பு சம்பவத்தோடு முஸ்லிம் சமூகத்தை தொடர்புபடுத்த உதவுகிறது. அப்துல் ஹலீம் சில நாட்கள் அல்லது சில மாதங்கள் விசாரணைக்குப் பின்னர், சம்பவத்தில் தொடர்பற்றவர் என விடப்படலாம். அது இந்தியா டுடேயில் மற்றும் அதன் கொள்கை வழி இதழ்களில் வெளிவராது. ஆனால் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பை முஸ்லிம்கள் சுமக்க இந்த கைது குஜராத் அரசுக்கு தேவைப் படுகிறது. ஆனால் மிக சமீபகாலமாக, உத்திரப் பிரதேசத்தில் உள்ள தேவ்பந்த் மதரஸா, பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற முழக்கம் பேசப்பட்டது. இந்தியாவில், அரசு, சட்டம், அரசு துறைகள் சார்ந்து மிக அதிகமான தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடியவர்கள் முஸ்லிம் சமூகத்தினர். அடிப்பட்டவர்கள் ஒன்று கூடி, நாங்கள் திருப்பி அடிப்பவர்கள் அல்ல என்று அடித்தவனிடம் முறையிடுவதை போன்றதாகவே அந்த மாநாடு இருந்து, முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அரசு பயங்கரவாதம் பற்றி அம்மாநாடு வாய் திறக்கவில்லை என்றபோதும் தேவ்பந்த் மதரஸா மௌலவி ஒருவர் கட்டம் கட்டப்பட்டி ருக்கிறார். இது இந்திய மதரஸாக்கள், அதன் பாடத் திட்டங்கள், ஆசிரியர்கள் மீது பயங்கரவாத முத்திரையை சுமத்தும் ஒரு ரகசிய நடவடிக்கை தான். இந்த கைதை இந்தியா டுடே நியாயப் படுத்தியுள்ளது. இந்திய பயங்கரவாதத் திற்கும் சர்வதேச பயங்கரவாதத்துக்கும் காரணம் என நிரூபிக்க இந்தியா டுடே அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.தேசத்தினுடைய வெட்கக் கேட்டின் ஒட்டு மொத்த உருவமாக மத்திய உள்துறை அமைச்சரை உருவகப் படுத்திவிட முடியாது என்று எஸ். பிரசன்னராஜன் என்ற கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பாஜக ஆட்சியில், கந்தகார் விமானத்தை பயணிகளுடன் மீட்க, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பயங்கரவாதிகள் என்று சொல்லப்படும் மூன்று பேரை பத்திரமாக காபூலில் கொண்டு போய் விட்டு வந்த செயலைக் குறிப்பிட இதைவிடக் கொச்சையான வார்த்தைகள் தேவைப்படும். ஆனால் இந்தியா டுடே வாய் திறக்கவில்லை. சிவராஜ் பாட்டீலை, பழுதுகளின் அறிகுறி என்கிறது இந்தியா டுடே.இந்தியா டுடே தனது கருத்துகளில் என்ன சொல்ல வருகிறது என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்க வில்லை. குறிப்பிட்டபடி ஒரு முஸ்லிம் அமைப்பையோ தனி நபர்களையோ தாக்கவில்லை. ஆனால் இன்னும் ஏன் இந்தியா முழுமைக்கும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்ற கேள்வியை தனது வரிகள் ஒவ்வொன்றிலும் பதிந்து வைக்கிறது. முஸ்லிம்கள் மீது வரைமுறையற்ற தாக்குதல் தொடுக்க சட்டத்திற்கு கூடுதல் அதிகாரம் தரும்படி இந்தியா டுடே வலியுறுத்துகிறது.2004ல், 'திட்டமிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்' குஜராத்தில் இயற்றப் பட்டும், 2006ல் இதே போன்ற சட்ட மசோதவிற்கும் ஒப்புதல் கேட்டு அனுப்பப்பட்டவைகள், நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்காமல் அப்படியே கிடக்கின்றன. 2001ல் ஆந்திர சட்ட மன்றத்திலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம் 2006 முதல் மத்திய அரசின் அனுமதிக்காக காத்து கிடக்கிறது. இதேபோல உ.பியும், மத்திய பிரதேசமும் திட்டமிட்ட குற்றங்களுக்கான சட்டங்கள் இயற்றி மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன. மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசுகள் கிரிமினல் சட்டங்களை அமுல் படுத்த முடியாது. ஆந்திரம், உ.பி நீங்கலாக குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மூன்றும் பாஜக ஆளும் மாநிலங்கள், மாஃபியாக்களை ஒடுக்க மாயாவதிக்கும், நக்ஸல்களை ஒடுக்க ஆந்திராவுக்கும் புதிய வலுவான கிரிமினல் சட்டங்கள் தேவைப்படுகிறது. ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை ஒடுக்க மத்திய அரசின் அனுமதி அவசியப்படுகிறது. சட்டங்களுக்கான அனுமதியை துரிதப் படுத்த, செயற்கையாக இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிராகரிக்கப்படக் கூடியதாக இல்லை. காரணம் நரேந்திர மோடிக்கும் குஜராத் அரசுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டிக் கொள்ள அதன் காவல்துறைக்கு செயற்கையான கபட தாக்குதல் (ஊய்ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ்?) தேவைப்பட்ட போது அதற்காக சொரப்தீன் என்ற முஸ்லிமை பயங்கர வாதத்தின் இஸ்லாமிய முகவரியாக காட்டவில்லையா? பின்னர் ஒரு மறைமுகமான உயர்மட்ட விசாரணை யில், வன்சரா என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தீட்டிய சதிதிட்டம் அது என்பது புலனானது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வன்சரா உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கபட தாக்குதலில் ராஜஸ்தான், மற்றும் ஆந்திர காவல்துறைக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்படவில்லயா? சொரப்தீனை பயங்கரவாதியாக பாத்திரம் படைத்த இந்தியா டுடே போன்ற மனோ வியாதிகள் வன்சராக்களை முஸ்லிம் களுக்கு எதிரான பயங்கரவாதிகள் என்று எழுதவில்லை.வன்சராவின் பராக்கிரமங்கள் பற்றி இந்தியாடுடே 'சுதேசி ஜிஹாத்' என்ற தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிடுகிறது.சமூகத்தை நோகடிக்காமல் எப்படி பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது என்பது தான் சட்டத்தை அமுல் படுத்து:ம அதிகாரிகள் முன் உள்ள சவால் என்கிறது. இந்தியா டுடே. அதே நேரம் பயங்கரவாதிகளை தேடுகிறேன் பேர்வழி என்று வன்சரா சமூகத்தை சிண்டியிருப்பதையும் தன்னிலை மறந்து குறிப்பிடுகிறது.டி.ஐ.ஜி., வன்சரா வஹாபிகளுக்கு நேரடியாகச் சொன்னால் முஸ்லிம் களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி னார். பயங்கரவாத எதிர்ப்பு படையின் பொறுப்பு வகித்தார். சொரப்தீன் கபட தாக்குதல் வழக்கில் ஜூன் 2007ல் இவர் கைது செய்யப்பட்ட போது இந்த முயற்சிகள் தடைப்பட்டன. வன்சராவின் சட்ட விரோத செயல்களை சர்ச்சைக் குரிய வழி என்று இந்தியாடுடே மெச்சுகிறது. முஸ்லிம் சமுதாயத்துக் குள்ளே, அச்சமூகத்தின் மிதவாத சக்திகளை ஊடுருவவிட்டு உளவு பார்ப்பது ஒரு வழியா? தனக்கு வேண்டாதவனையும் ஒழித்துக் கட்ட விரும்புபவனையும் தான் ஒன்றும் செய்ய வேண்டாம், டி.ஐ.ஜி வன்சராவிடம் சொன்னால் போதும், அவர் கதையை முடித்து விடுவார். இது சட்டவிரோத செயல். இதனை சர்ச்சைக்குரிய வழி என்கிறது இந்தியா டுடே. வன்சராவின் மற்றுமொரு சர்ச்சைக் குரிய வழியா தெனில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பின் வன்சராவின் வன்முறைக்கும் பயந்து தலைமறைவாக இருப்பவர்களின் உறவினர்களை தனது சொந்த பாதுகாப்பில் வைத்துக் கொள் வாராம். குற்றம் சாட்டப்பட்டவர் கள். போலிஸில் ஆஜராகும் வரை உறவினர் கள் (ஆண், பெண் என்று யாராக இருந்தாலும்) இவரது கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்கிறது இந்தியா டுடே. இது சட்டவிரோதமாக இருந்தாலும் மதவாத இஸ்லாமிய சக்திகளை இறுக்கிப் பிடிக்க இந்த வழி உதவியதாம். அதாவது, இஸ்லாத்தை அழிக்க முஸ்லிம்களை ஒடுக்க தயாராகி வரும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு அவர் விருப்பம் போல் செயல்பட அனுமதித்து விடு. சட்டங் களுக்கும், வரைமுறைகளுக்கும் அங்கு வேலை இல்லை என்கிறது இந்தியா டுடே. அஹமதாபாத்தில் குண்டு வெடித்த சில நிமிடங்களில் கைதான அப்துல் ஹலீமின் நிலையை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியா டுடே என்ன சொல்ல வருகிறது என்பது புரியும். இது குண்டு வெடிப்புக்கு அல்லது வைப்புக்கு முந்திய சதி ஆலோசனை யில், சம்பவத்தின் பின்னாளில் அதனை எப்படி எழுத வேண்டும் என்று கருத்து பயங்கரவாத விவாதத்தில் இந்தியா டுடே குழுவும் கலந்துகொண்டு திரும்பி யிருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.கோத்ரா ரயில் எரிந்த போது அதை முஸ்லிம்கள் தான் எரித்தனர் என்று இந்தியா டுடேயும் வாய்விட்டு அலறியது. லல்லு பிரசாத் பின்னர் மேற்கொண்ட துறை ரீதியிலான விசாரணையும், தடய அறிவியல் ஆய்வும், முஸ்லிம்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது. அதற்கே இன்னும் இந்தியா டுடே மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், தாங்களே மனோ இச்சைப் படி உருவாக்கிய மாநில சட்டங்களை கொண்டு வன்சராக்களை ஏவி முஸ்லிம் களை கொடுமைப்படுத்த மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. அது இன்னும் கிடைக்காத நிலையில், அனுமதிக்கான நெருக்கடியை நோக்கி மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்ய ஏன் இந்த குண்டு வெடிப்புகள் செயற்கையாக செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற கேள்விக்கு இந்தியா டுடே பதில் தர வேண்டும்.வன்சராவின் செயல்பாடுகள் முஸ்லிம்களை துன்புறுத்துவதாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது ஆனால் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க இவையெல்லாம் தேவையான நடவ டிக்கை என்று போலிஸ் அதிகாரிகள் சொல்கிறார்களாம். இந்தியா டுடே சொல்லவில்லையாம். இந்தியா டுடே அலுவலகத்துக்கு போனில் சொல்லி இருப்பார்கள் போலும்.சரி, வன்சராக்கள் பதவி வகிக்கும் மாநிலங்களில் யார் யாரிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். மேலும் வன்ôரா வகையறாக்களுக்கும் இந்தியா டுடே வகையறாக்களுக்கும் அடிப்படை யில் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது ஒன்றுதானே நோக்கம்.ஒரு போலிஸ் அதிகாரி சொல்கிறா ராம். இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து வலை மிகப்பெரியதாக விரிக்கப்பட வேண்டும். அப்படி ஏராளமான மீன்கள் மாட்டும் போது, தேவையான மீன்களை வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றை விட்டு விடலாம் என்று சொன்னாராம். அதாவது பாருங்கள், இந்தியாவில் சகோதர மனப்பான்மையுடன் வாழ விரும்பும் முஸ்லிம்கள் பற்றி இந்தியா டுடேலியோ அல்லது இந்தியா டுடே குறிப்பிடுவது போன்ற காவல்துறை அதிகாரிகளே வைத்திருக்கும் அபிமா னத்தை. முஸ்லிம் களை மனிதர்களாகப் பார்க்கக்கூட அவர்களால் இயலவில்லை. சென்று திரும்பும் இடம் தெரியாத மீன் போன்ற அற்ப உயிரினங்களுக்கு ஒப்பாக மதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை இந்த உதாரணம் கூட, இதனை வாசிக்கும் முஸ்லிம் இளைஞ னின் ரத்தத்தை சூடாக்கி, அவனுடைய ஆதங்கக் குரலைக் கூட பயங்கரவாத ஓசை என்று லபக் என பிடித்து நீதிமன்றத்திலும் பெரும்பான்மையினரின் மனசாட்சியை திருப்திப்படுத்த நினைக் கும் நீதிபதிகளைக் கொண்டு வந்து, அவனை பின்னர் தூக்கு மேடையிலும் நிறுத்தி விடலாம் என்று நினைத்து இப்படிப்பட்ட அற்பமான உதாரணங் களை குறிப்பிடுகிறார்களோ? இந்த தருணங்களில்தான் பெரியாரின் சில பொன்மொழிகளை நாமும் நினைவு றுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.பயங்கரவாதத்தை ஒடுக்கக்கூடாது என்று கூறவில்லை; ஏதும் அறியாத அப்பாவிகளை சாலை நெடுகிலும் மருத்துவமனைகளிலும், அலுவலகம், பள்ளிக்கூடங்களிலும் இரக்கமின்றி கொன்று ஒழிக்கும் கடின மனம் படைத்தவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த மதத்தில், எந்த சமூகத்தில் பிறந்திருந்தாலும் சரியே. ஆனால் அத்தகைய கடின சிந்தை உடையோர் தோன்றாமல் இருக்க முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் ஒரு நல்ல அரசு சிந்திக்க வேண்டும். ஆனால் பாஜக அரசுகளிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. நரேந்திர மோடிகள் மீண்டும் மீண்டும் முதல்வரா வதை தடுக்கும் சட்டம் வழிகளை ஆராய வேண்டும். அத்வானி போன்ற வர்களை பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கிலும், பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, அசோக் சிங்கால், உமாபாரதி மற்றும் சூலாயுதத்தோடு சபதம் போடும் வி.எச்.பி தலைவர் பிரவீண் தொகாடியாவையும் சிறையில் போட வழிவகை செய்யும் சட்டம் எதுவென விரைந்து நிறைவேற்ற வேண்டும். அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெடிகுண்டு நிஜங் களும், புரளிகளும் கிளப்பி விடும் அரசியல் நபர்களை களையெடுக்கவும், அப்பாவிகளை சிறையிலிடும், சுட்டுக் கொல்லும் வன்சராக்கள் போன்ற சட்டத்தை மீறும் காவல்துறை கயமை களை தண்டனையுடன் சிறையிலிடவும் போதுமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டமிட்டு மனித உளவுக்கு ஆள் எடுக்கத் தூண்டும் பாஜக ஆர்.எஸ்.எஸ். ஸின் ஊது குழல்களாக உள்ள இந்தியா டுடேக்களையும் தினமலரையும் மூடிவிட சட்டம் வேண்டும்.அத்துடன், குண்டுகளை அடுக்கி வைத்து குலைகுலையாக கொலை செய்யும் கொடும் பயங்கரவாதிகளை அடிவேரோடு அழிக்கும் சட்டங்களை அதே கையோடு நிறைவேற்ற வேண்டும் என்பது இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் பேரவா.
நன்றி : மக்கள் உரிமை http://tmmk.in/news/999701.htm

No comments: