Thursday, July 24, 2008

நெல்லை - உணர்வாய் உன்னை

அல்லாஹ்வின் திருப்பெயரால்
உணர்வாய் உன்னை
Personality Development in Islamic Perspective
Date : 26th July 2008 Time : 9.30 am to 5.00 pm
Place : Al Huda English School, 9th street, Eruvadi
பயிற்சி முகாமின் நோக்கங்கள்
உள்ளதை தூய்மைப்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுதல்
தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடல்
சுற்றி இருப்பவர்களுடன் அன்பாக இருத்தல்
நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்
எண்ணத்திலும் செயலிலும் தூய்மையை நிலை நிறுத்துதல்
கடந்த காலத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நிகழ காலத்தில் வெற்றி பெறுதல்
இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை அடைதல்
பயிற்சியாளர் : Brother Nellikuppam Ferozkhan
இனிமையான அனுபவங்கள்
எளிய நடை
சகோதர வாஞ்சை
கலகலப்பான கலந்துரையாடல்
சந்தோஷ பகிர்வு
என வாழ்வின் ஒவ்வோர் அசைவும் ஒரே கூரையின் கீழ்
தொடர்புக்கு: 94443970705, 9840405191, 9442894262

Tuesday, July 22, 2008

என்ன தான் நடக்கிறது ?

Every trick in the tradeThe Telegraph

Trust vote: UPA takes lead in poaching gameThe Economic Times

"Multimillion-pound bribes, MPs serving jail terms and some in intensive care are among the arsenal of weapons being wielded in a dramatic battle". The Independent, U.K.

"Such is the uncertainty over the vote that a number of jailed parliamentarians — some convicted of murder — have been granted temporary release while other MPs allegedly been offered multi-million pound bribes to voteThe Guardian, U.K

Jailbirds get red carpet treatment to bail out GovtIBN Live

அன்பு சகோதர சகோதரிகளே

மேலே உள்ளவை இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கு குறித்த தலைப்பு செய்திகள்

கோடிகணக்கில் பேரம், மந்திரி பதவி ஆசை, கிரிமினல்களுக்கு உபசாரம் ஜனநாயகம் குறித்து நம் நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்கள் சொன்னார்கள் " அரசியல் கிரிமினல்களின் கடைசி புகலிடம் " மாறாக அரசியல் கிரிமினல்களின் முதல் புகலிடம் என்பதை நாம் உணரலாம்.அதனால் தான் ஒரு அறிஞர் "ஜனநாயகத்தில் நீங்கள் விரும்புவரை தலைவராக தேர்வு செய்யலாம். ஆனால் உங்களை விரும்புவரை தேர்ந்து எடுக்க முடியாது "

இன்னும் நம் இஸ்லாமிய இயக்கங்கள் கூட இஸ்லாத்தின் நேரெதிர் கொள்கையாகிய ஜனநாயகத்தின் அடிப்படையில் நாற்காலி கனவுகளுகில் மிதப்பவர்களாக , இந்தியாவின் சுதந்திரம் இஸ்லாத்தின் மூலமே என்று முழங்கிய மண்ணிலே ஜனநாயகத்தின் காவாலாளிகளாக அணி வகுக்க அழைக்கின்றனர்.

மாறுவோம் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ! இஸ்லாம் ஒன்றே நம்மை வழி நடத்தும் கொள்கையாக இருக்கட்டும் !

Nuclear Agreement between India - USA :MUST READ BY EVERY INDIAN

There are lot of talks about 1 2 3 Agreement between India & USA and italmost led to the topple of Central Government. In this mail I am trying to explain the commercial & technical aspects relating to this Agreementwhich I have read and sharing with you.

What is 123 Agreement?

This is called 123 Agreement because this comes under USA's Atomic PowerAct Section 123.Let's see how India's (Indians?) Sovereinty & Independence are pledged...

(1) After this Agreement USA will supply all fuel, machinery / equipment& technology to India for producing Nuclear Power.

(2) All these days from about 22 Nuclear Power Plants, India isproducing power as well as Atom. It's a high security / secret that from where which is produced, how much is produced, where it issupplied, what research is being done with that, etc. to anybody. Butif we sign this Agreement, we have to disclose these secrets and alsoagree to 14 of our Nuclear Power Plants to be under the scanner of International Atomic Power Organisation.

(3) The fuel utilised to produce Atomic Power can be recycled for reuseand this plant will be under direct supervision of IAPO. If India does nuclear test, this agreement gets cancelled.

But(1) USA will take back all the machinery / equipments / technologysupplied to India thus far.(2) Those 14 plants will continue to be under scanner irrespective of the status of the agreement.On the other hand, if any of the commitments given by USA is breached bythem, then there is no clause for cancelling this agreement. The agreement is apparently like this... USA can either hug India orslap India. India will not ask why are we hugged or why are we slapped. On the other hand, India cannot hug or slap USA for breach of agreement.This is only capsule so that easy to read and digest.

Subject: India Pledged.... Part 2Requirement of Power

The most important requirement for India's Economic Growth in the comingyears will be the power & infrastructure. The argument put forthfavouring the 123 Agreement says that we need Nuclear Power Production to be increased to meet the demand.Power Production in IndiaPresently following are the figures:

Thermal Power 66%

Hydel Power 26%

Solar & Wind Power 5%

Nuclear Power 3%

Presently Rs.600 Crores are spent for producing this power. - If this is to be increased to 6%, itrequires additional Rs.50,000 Crores.Naturally it will be wise to increase other 3 modes of power productionrather than the expensive & dangerous Nuclear Power. Isn't??

URANIUM

We used to import Uranium from various other countries. After thePokran Test, we are not getting it. To augment the supply, we need to sign the 123 Agreement to get Uranium from USA. But we will have todeclare to USA from which power plant India takes raw material forproducing Atom Bomb. Why should we disclose our internal secrets tothose rascals ? Will any one allow an outsider to continuously monitorwhat's happening in your Hall & Kitchen of your house? Other study reveals that Uranium is available in India aplenty. Only hurdle is theacquisition of land. To produce Atomic Power & Bomb in the next 40years, the requirement of Uranium is 25,000 MT whereas the availability is 78,000 MT across India.

PLUTONIUM

Presently 35% of Plutonium is used to produce Atomic Bombs. After signing the Agreement, we will be allowed to use only 10%. Who are thoserascals to restrict the usage of our natural resource ? That is though you are capable of cooking & eating 10 idlis as your breakfast, you areallowed only 3 idlis henceforth. How can it be? Why should we acceptthis?

THORIUM

As told by Dr.APJ, we have abundant Thorium. In fact we are the 2ndlargest producer of Thorium next only to Australia. India has to explore this further for producing power. For your information, inSouth India - particularly around Kanyakumari, the availability ofThorium is abundant.

INDIA-IRAN-CHINA

USA does not like the amicable relationship between India-Iran and also India-China. If India-China relationship gets stronger, then both these can rule the Eastern Part of the Globe which USA wants to break as pertheir divide & rule. By signing this agreement, USA wants India to depend on it for producingpower which is going to be a crucial factor in future. There is a talkof bringing Natural Gas from Iran to India with a big pipeline project. USA doesn't like this proposal.Atomic Power Technology Whether power is produced or Bomb is produced, using Atomic powerwithout spoiling the infrastructure and without allowing the radiationis always under threat. Moreover preserving the wastes coming out of Atomic Power Plants is expensive & unsafe.There was an accident in Three Miles Island in USA. To close this plantnearly USD 200 Crores spent with tons & tons of concrete but yet to be fully closed.In an another accident at Soviet Union's Serbia Plant, even the nextgeneration child are affected due to the radiation. It will be very very expensive to defuse & close down an Atomic PowerPlant than its construction cost. FranceFrance has got 56 Nuclear Power stations producing 73% of the country's total power requirement. They are catching up the problem ofeliminating the wastes / emissions from out of those plants at the sametime increase the power production capacity. Government of France is now thinking how to reduce the power consumption in the country.

Conclusion

In view of the above danger, rather than signing the agreement andpledging India to USA, it will be prudent to increase the Solar & WindEnergy and more importantly Hyder Power Production can be increased by linking all rivers across India and by constructing DAMS. (Ofcourse Damconstruction projects can be given to L&T's B&F Sector:-)The whole process of this Agreement started in the year 2005 when Manmohan visited USA. In a span of just 2 years a major decision ofsigning this agreement has taken place with political motive. On thecontrary, neither this Government nor any other earlier Central Government could not amend the Constitution thereby nationalise therivers across the country thereby effectively utilise the waterresources for both Agriculture purpose and producing Hydel Power. Whatan irony? Whenever someone is helping the needy, you can't expect the TERMS ANDCONDITIONS BETWEEN THE needy and the helper to be EQUAL??? BUT (1) the helper's ulterior motive should be seen with broad eye becausehe is capable of digging a grave behind you and (2) better to be self-sufficient and explore new avenues with availableresources.

INDIA-CHINA- USA

India is very rich in Culture, follow Religions, Value Ethics, Level ofEducation is Very Good. China is also rich in Culture, follow Religion, better disciplined.USA does not have Culture, does not have Ethics, only want power overothers. Particularly wants a firm footing in South Asia. Remember theintroduction EURO by European Countries and it is stronger than Dollar? So their "DAL" cannot be boiled at "EUROPE". They are trying in Indiaas already Pakistan is in their clutches.

Feedback

Above is only a capsule of information. It will be easy & better tohave an interactive session in a Hall with good auidence on topics such as this.Also look forward to your views on this subject

Thursday, July 17, 2008

நஸ்ருல்லாஹ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்குறுதி அளிக்கிறார்!! ஓல்மர்ட் அவமானத்தை வாக்குறுதியளிக்கிறார்

ஹிஸ்புல்லாவின் நஸ்ருல்லாஹ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்குறுதி அளிக்கிறார்!! இஸ்ரேலிய யூதர்களின் பிரதமர் ஓல்மர்ட் அவமானத்தை வாக்குறுதியளிக்கிறார்!!Nasrullah Gurantees Freedom and Israel's Olmert Guarantees Humiliation

இதுதான் மத்தியகிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் எங்கும் அன்றைய தின முழக்கமாக இருந்தது. ஜீலை 16, 2008 அமெரிக்காவின் கள்ளக்குழந்தையான இஸ்ரேலுக்கும் தங்கள் மண்ணை மீட்க அற்பனிப்பு யுத்தங்களை நடத்திக் கொண்டிருக்கும் லெபனானின் போராளிகளான ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையேயான யுத்தம் முடிந்து சரியாக இரன்டு வருடங்களும் நான்கு நாட்களுமாகியிருந்தன. இன்றைய தினம் ஹிஸ்புல்லாக்களின் தலைவரான ஹஸன் நஸ்ருலு்லாஹ் அவர்கள் தன் மக்களுக்கு வாக்களித்திருந்தபடி தனது நாட்டின் இறுதி பனயக் கைதிகளாக யூத தீவிரவாத நாடான இஸ்ரேலிடம் பிடிபட்டு சித்திரவதைகளை அனுபவித்து கொண்டிருந்த ஐந்து குடிமக்களை மீட்டு வந்திருந்தார். ஆம், அதன் எதிரொளியாக மத்திய கிழக்கு நாடுகலெங்கும் மகிழச்சி கரைபுரன்டோடியது. லெபனான் தனது நாடு முழுவதும் இந்த மகிழச்சியை கொண்டாட பொது விடுமுறை அளித்திருந்தது.
ஹிஸ்புல்லாக்களின் கட்டளைக்கு பணிந்த யூத தீவிரவாத நாடான இஸ்ரேல் பல வருடங்களாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐந்து லெபனானிய போராளிகளை இஸ்ரேல்-லெபனான் எல்லையில் "ரோஸ் ஹனிக்ரா எல்லை வாயில்" ஹிஸ்புல்லாக்களிடம் கையளித்தது. பின்னர் நகூரா என்ற கடற்கரையோர நகரத்தில் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த ஐந்து போராளிகளும் உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் துனைக்கு பரந்து வர லெபனானிய தலைநகரான பெய்ரூட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.ஆச்சர்யம், அதிசயம், ஆம்!! இந்த வீரப் போராளிகளை வரவேற்க லெபனானின் தலைவாக்ள் மட்டுமின்றி உலக நாடுகிளன் தலைவர்களும், தூதுவர்களும் பெய்ரூட் விமானி நிலையத்தில் பல மனிநேரங்கள் காத்திருந்த காட்சியை தொடாச்சியாக அரபு தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. லெபனானின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அனைத்து அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், எதி்ர்க் கட்சித் தலைவர்கள், லெபனானில் இயங்கும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,இஸ்லாமிய, கிருத்துவ, அனைத்து சமய தலைவர்கள், ஜெர்மனி, பிரான்ஸ்,ஈரான், என பல நாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், இராஜ தந்திரிகளும் பெய்ரூட் விமான நிலையத்தின் வெட்ட வெளியில் இந்த வீரப் போராளிகளை வரவேற்க பல மணி நேரம் காத்து நின்ற காட்சி ஆச்சாயப்படத்தக்கதாக இருந்தது.ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் புடைசூழ வீரப்போராளிகளின் வானூர்தி தரைதொட்ட தருனம் லெபனானின் தேசிய கீதம் முழங்கின நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் அந்த வீரப் போராளிகளுக்கு நெஞ்சை உயர்த்தி மறியாதை செய்து வரவேற்றதற்கு உலகம் சாட்சியானது. யாரைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றனரோ அந்த போராளிகளை முப்படை அணிவகுப்புடன் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், இமைச்சர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், உலக துர்துவர்கள் என அனைவருமே திரன்டு வரவேற்றது அமெரிக்க, இஸ்ரேலிய தீவிரவாத அரச தலைவர்களுக்கு பல மாதங்களுக்கு துர்க்கத்தை கெடுக்கும் என்பது உண்மை.இந்நிக்ழ்வில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நாயகனாக போற்றப்பட்டவர் சமீர் குந்த்தார் என்பவராவார். சரி யார் இந்த சமீர் குந்த்தார் என்று கேட்கின்றீர்களா? யூத இஸ்ரேலிய பயங்கரவாதிகாளால் தீவிரவாதி என்றும் லெபனானிய, பாலஸ்த்தீனிய மக்களால் போராளியாக போற்றப்படும் இந்த சமீர் குந்த்தார் என்பவர் லெபனான், பாலஸ்த்தீன், சிரியா போன்ற நாடுகிளல் வாழும் சில மக்களால் பின்பற்றப்படும் மதமான "துரூஸி" எனும் பரிவைச் சோந்தவர், லெனபானிய மலைப்பகுதி கிராமமான் "ஆபே" எனும் ஊரில் 1962 ம் வருடம் ஜீலை 20ம் நாள் பிறந்தார், அந்த கால கட்டத்தில் தான் அரபு இஸ்ரேலிய யுத்தங்கள் தீவிரமடைந்திருந்த காலம், இஸ்ரேலிய யூத இனவெறி அரசு பாலஸ்த்தீனிய, லெபனானிய மக்க கொன்று அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி கொண்டிருந்த காலம். அந்த கால கட்டத்தில் ஹிஸ்புல்லாவோ, ஹமாஸோ தோன்றியிராத காலகட்டம் அது. அன்றைய நாட்களில் தங்கள் நிலத்தையும் இழந்து, உயிர் உடமைகளையும் இழந்து அவமானப்படுத்தப்பட்டு சொந்த மன்னில் அகதிகளாக ஆகியிருந்த மக்களில் பலர் தங்கள் மண்ணின் விடுதலைக்காக ஒன்று சோந்து போராடத் துவங்கியிருந்த காலம்.
அமெரிக்க, பிரித்தானி உதவிகளுகடன் அரபு மக்களின் மீது தனது அடக்குமுறையை இஸ்ரேல் ஏவி விட்டிருந்த காலம் அது அப்போது அபு அப்பாஸ் என்பவர் "பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி" (PLF) என்ற ஒரு போராளிக் குழுவொன்றை நிறுவி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இரானுவத்திற்கெதிராக கொரில்லாத் தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்த நேரத்தில் தனது இன அரபு மக்கள் படும் கஷட்டங்களை கண்ட இளைஞனான சமீர் கந்தார் தனது மிகச் சிறிய வயதில் அபு அப்பாஸ் அவர்களின் பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்துடன் நில்லாது அற்பனிப்புடன் பல இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான பல தாக்குதல்களிலும் பங்கெடுத்துள்ளார். 1970 ல் இருந்து 1980 கால கட்டங்களில் உலகின் பல பாகங்களில் அமெரிக்க, இஸ்ரேலிய நிலைகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி நிலை குலைய வைத்திருந்த காலம் அது.

தாக்குதலுக்கு தயாராக சமீர் கந்தார் குழு இடமிருந்து முதலாவதாக சமீர்
வீரியமிக்க இளைஞனாக இருந்த சமீர் குந்த்தர் அவர்களின் தலைமையில் யூத இன வெறியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பாலஸ்த்தீனிய கடற்கரையோர நகரமான நகரியாவின் மீது ஒரு தாக்குதலை தொடுத்து அங்குள்ள யூதர்களை நிலைகுலையச் அங்கிருந்த விரட்ட் வேண்டிய முக்கிய தாக்குதலுக்கு பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி தயாராகியது. சமீர் குந்த்தார் அவர்களுக்கு அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.ஏப்ரல் 22, 1979 "தாக்குதல் நஸர்" என்று பெயரிடப்பட்டிருந்த நகரியா மீட்பு நடவடிக்கையில் இறங்க சமீர் கந்த்தார் தலைமையில் நன்கு பயிற்சி பெற்றிருந்த பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனியின் நான்கு நபர்களை கொண்ட கொரில்லா போராளி குழுவொன்று கிளம்பியது. சமீர் குந்த்தார் தவிர அப்துல் மஜீத் அஸ்லன், அஹ்மத் அல் அப்ரஸ், முஹன்னா ஸாலிம் அல் முஅய்யத்
என் மூன்று போராளிகளும் இடம் பெற்றிருந்தனர். லெபனானின் கடற்கரையோர நகரமான "டையர்" எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே இருந்தது தாக்குதல் நடத்த வேண்டிய நகரியா என்ற பகுதி, நிலப் பரப்பு வழியாக ஊடுருவ இயலாது யூத பேரிணவாதிகள் கடுமையான கண்ணிவெடிகளை விதைத்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததால், 55 குதிரை சக்தியுள்ள இழுவை இயந்திரம் பொறுத்தப்பட்ட ரப்பர் விரைவுப் படகில் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் நள்ளிரவின் அமைதியை கிழித்த வண்ணம் நகரியாவை நோக்கி பயனப்பட்டார்கள் இந்த கொரில்லாப் போராளிக் குழுவினர்.நகரியாவின் கடற்கரையில் வந்திரங்கிய சமீர் குந்த்தாரின் போராளிக் குழுவினர் தங்களின் திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் திடீரென ஒரு யூத இணவெறி காவலன் ஒருவன் இவர்களை கண்டுவிட்டான் உடனே அவன் தனது சகாக்களை அழைக்க முற்ப்பட்டபோது போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த யூத இணவெறிக் காவலன் கொல்லப்பட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உஷாரான இஸ்ரேலிய யூத இணவெறி இரானுவத்தினர் அவ்விடத்தில் வந்து குவிந்தனர் உடனே நிலைமையை உணாந்து தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்ட போராளிக் குழுவினர் யூத இணவெறி இரானுவத்தினரோடு கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டவாறு முன்னேறினர். அப்போது நடந்த கடுமையான சண்டையில் சமீர் குந்தாரோடு வந்திருந்த போராளிகளான அப்துல் மஜீத் அஸ்லன், முஹன்னா ஸாலிம் அல் முஅய்யத் ஆகிய போராளிகள் வீரச் சாவை எய்தினர். அஹ்மத் அல் அப்ரஸ் மற்றும் சமீர் குந்த்தார் ஆகியோர் ஆயுதம் உள்ளவரை போராடினர் இறுதியில் எதிரிகளிடம் பிடிபட்டனர். இந்த வீரப் போராட்ட்த்தில் இவர்கள் இரு யூத இன வெறி காவலர்களை கொன்றனர். கடுமையான சண்டைக்கு மத்தியில் இந்த போராளிகள் அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர் (இஸ்ரேலில் பொதுமக்கள் (சிவிலியன்) என்று யாரும் கிடையாது, இஸ்ரேலிய குடிமகன் ஒவ்வொருவனும் இரானுவ வீரனாவான், ஆயுதம் தரித்தே இருப்பார்கள் யூதர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவும்) அப்போது ஒரு யூதக் குடும்பம் இந்த சண்டைக்கிடையில் மாட்டிக் கொண்டது. அங்கிருந்த யூதனை பணயக் கைதியாக பிடித்த சமீர் குந்த்தார் அவர்கள் தனது தாக்குதலை தொடாந்து நடத்திக் கொண்டே முன்னுறினார்.
இதற்கிடையில் தனது குழந்தையோடு துனி வைக்கும் அலமாறியில் ஒழிந்த அந்த யூதனின் மனைவி குழந்தை அழவே குழந்தையின் அழுகை ஒலி தன்னை போராளிகளிடம் காட்டிக் கொடுத்து விடும் என்று பயந்து தனது குழந்தையின் வாயையும் மூக்கையும் பொத்தி கொன்று விட்டாள். இதற்கிடையில் நடைபெற்ற சண்டையில் சிக்கி பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த யூதனும் செத்து விட்டான். சமிர் குந்த்தார் அவர்களை யூத இரானுவம் கைது செய்தது. பின்னர் உலக நாடுகளின் பரிதாபத்தை பெறுவதற்காக வேண்டியும், பாலஸ்த்தீன் அரபு போராளிகளை உலக மக்கள் மத்தியில் பயங்கிரவாதிகளாக காட்டுவதற்காகவும், சமீர் கந்த்தார் பிடித்து வைத்திருந்த யூதனின் குழந்தையை மன்டையை சிதறடித்து கொன்ற யூதர்கள் அதை சமீர் கந்த்தார் தான் செய்ததாக் குற்றம் சாட்டினர். உலகெங்கும் பச்சிலம் குழந்தையை அரபு தீவிரவாதி மன்டையை சிதறடித்து கொன்றதாக பிரச்சாரம் செய்து அனுதாபம் ஈட்டினர் யூத பயங்கரவாதிகள். (பல ஆயிரம் பாலஸ்த்தீன் பச்சிலம் குழந்தைகளை தீவிரவாத இஸ்ரேலிய இரானுவம் கொன்று குவிப்பதை இன்றைய உலகம் வேக்கை பர்ர்க்கின்றது ஆனால் ஒரு யூதனோ அல்லது யூதக் குழந்தையோ தாக்குதலில் கொல்லப்பட்டால் உலகம் கதறுகின்றது தீவிரவாதம் என்று)

யூதர்களால் பிடிக்கப்பட்ட போராளி சமீர் குந்தார் அவர்கள் மீது குழந்தையை மன்டையை சிதறடித்து கொன்றது என பல பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் அவை அனைத்தையும் இன்று வரை மறுத்தே வந்துள்ளார் சமீர் குந்த்தார் அவர்கள். முக்கியமாக குழந்தை படுகொலையை தான் செய்யவில்லை என மறுத்துள்ளார். ஆனால் ஆக்கிரமிப்பு சக்திகளான யூத தீவிரவாதிகளின் நீதி மன்றம் சமீர் குந்தார் அவர்களுக்கு 542 வருடங்'கள் சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்தது. தனது 17 வயதில் சிறை சென்ற சமீர் அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 27 வருடங்கள் யூதர்களின் சிறையில் வாடிய சமீர் குந்தார் அவர்கள் நீண்ட கால் அரபு சிறைவாசி என்ற பெயரினையும் பெற்றார். தனது சிறைவாசத்தின் போது சிறைவாசிகளின் நலனுக்காக போராடிய ஒரு இஸ்ரேலிய அரபு பென்னை மணந்தார் ஆனால் பின்னர் அந்த பென்னை விவாகரத்து செய்து விட்டார். இன்று அவரது வயது 46.
பாலஸ்த்தீன் சுதந்திர இயக்கத்தின் முக்கிய போராளியாக சமீர் கந்த்தார் இருந்தமையால் அவரை மீட்பதற்கு பல போராளிக் குழுக்களும் நடவடிக்கை எடுத்தன. சமீர் குந்தாரோடு பிடிபட்ட அஹ்மத் அல்அப்ராஸ் அவர்கள் 1985 ல் இஸ்ரேலால் செய்யப்பட்ட "ஜிப்ரீல் ஓப்பந்தம்" மூலம் விடுதலை செய்யப்பட்டார், ஆனால் சமீர் குந்தாரை விடுதலை செய் இஸ்ரேல் ஒவ்வொரு கட்டத்திலும் மறுத்தே வந்துள்ளது. 1985 ம் ஆன்டு சமீர் கந்தாரின் விடுதலை கோரி இஸ்ரேலிய அமெரிக்க பயணிகள் பயனம் செய்த கப்பல் ஒன்றை பாலஸத்தீன விடுதலை முண்ணனியினர் பிடித்தனர் பின்னர் சமீர் கந்தாரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதால் அதில் இருந்த முரன்டு பிடித்த ஒரு அமெரிக்க யூதனை கொன்று விட்டு கப்பலை எகிப்திடம் ஒப்படைத்து விட்டனர்.பின்னர் நடந்த பல பணயக் கைதிகள் பறிமாற்றத்தின் போதும் சமிர் கந்தாரை விடுவிக்க மறுத்து விட்டது இஸ்ரேல். ஆனால ஹிஸ்புல்லா உதயமானதற்கு பிறகு ஹிஸ்புல்லாக்களின் தலைவரால் இஸ்ரேலிய சிறையில் வாடும் பாலஸ்த்தீன், லெபனான் விடுதலை போராளிகளுக்கு ஒரு வாக்குறுதி அளிகப்ப்பட்டது அது என்னவென்றால் இஸ்ரேல் சிறையில் வாடும் கடைசி லெபனானிய கைதியை மீட்கும் வரை ஹிஸ்புல்லா போராடும் என்பதே அது. அது போலவே பல பாலஸத்தீன லெபனானிய கைதிகளை மீட்டெடுத்துள்ளது ஹிஸ்புல்லா.மே 26, 2006 ம் ஆண்டு ஹிஸ்புல்லா இஸ்ரேலிய யூத இனவெறி இரானுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களில் 8 போரை கொன்றதோடு இருவரை காயங்களோடு பிடித்து சென்றது. அந்த இருவரை விடுதலை செய்ய வேண்டுமானால் சமீர் கந்தாரோடு கடைசியாக இஸ்ரேலிய சிறைகளில் மிச்சமிருக்கும் லெபனானிய போராளிகளையும் 50 வருடங்களுக்கும் மேறப்பட்ட யுத்தத்தில் இறந்து போன பாலஸத்தீன்,லெபனானிய, அரபு வீரர்களின் சடலங்களின் மிச்ச மீதிகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியது, ஆனால் இஸ்ரேல் அதை மதிக்காமல் அமெரிக்காவின் பேச்சை கேட்டு யுத்தத்தை ஆரம்பித்து 1000 த்திற்கு மேற்ப்பட்ட லெபனானியர்களை கோழைத்தனமாக குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி கொன்றதுடன் தனது முழு படை பலத்தையும் பயன்படுத்தியும் ஹிஸ்புல்லாக்களின் அதிரடித் தாக்குதலின் முன் ஒன்றும் செய்ய இயலாமல் நூற்றுக் கணக்கி்ல் தனது இரானுவ வீரர்களை இழந்து அவமானகரமான தோல்வியை சந்தித்தது.
பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமீர் கந்தார் உட்பட எஞ்சியிருந்த லெபனானிய போராளிகளை விடுவிக்கவும், 50 வருடங்களுக்கும் மேறப்பட்ட யுத்தத்தில் இறந்து போன பாலஸத்தீன்,லெபனானிய, அரபு வீரர்களின் சடலங்களின் மிச்ச மீதிகளையும் தங்களிடம் ஒப்படைக்கவும் ஒத்துக் கொண்டது. பேச்சுவார்ததை ஜெர்மனிய நாட்டின் நடுநிலைமை வகித்தது. இறுதியில் நேற்று வீரப் போராளிகள் சமீர் கந்தார் தலைமையில் சுதந்திரப் பறவைகளாக லெபனானிய மண்ணில் நுலைந்தனர்.இநத மாவீரர்களைத்தான் லெபனானின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அனைத்து அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், எதி்ர்க் கட்சித் தலைவர்கள், லெபனானில் இயங்கும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,இஸ்லாமிய, கிருத்துவ, அனைத்து சமய தலைவர்கள், ஜெர்மனி, பிரான்ஸ்,ஈரான், என பல நாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், இராஜ தந்திரிகளும் பெய்ரூட் விமான நிலையத்தின் வெட்ட வெளியில் இந்த வீரப் போராளிகளை வரவேற்க பல மணி நேரம் காத்து நின்று வரவேற்றனர். இவர்களின் விடுதலையில் ஒட்டுமொத்த அரபுலகமும் திளைத்தது.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் இரானுவ உடையில் வந்து பேசிய சமீர் கந்தார் உட்பட அனைத்து போராளிகளும், நாங்கள் பாலஸ்த்தீன் மண்ணில் யூத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு லெபனானிய மண்ணிற்கு வந்துள்ளோம் ஆனால் பாலஸ்த்தீன மண்ணை மீட்பதே எங்கள் குறிக்கோளாகும் அது வரை எங்கள் போராட்டம் தெர்ரும் என்றனர். பின்னர் பேசிய ஹிஸ்புல்லர்களின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடிய அரபு சிறைவாசிகளின் சுதந்திரத்திற்கு அவர்களை மீட்டெடுப்பதாக உறுதியளித்திருந்தோம் அதில் உறுதியாக நின்று அவாக்ளை மிடு்டெடுத்துள்ளோம், இன்னும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்த்தீன மண்ணையும், பாலஸ்த்தீனர்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு அரபு மண்ணையும் மீட்டெடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு உறுதியிளத்தள்ளோம் அவர்களின் சுதந்திரம் உறுதியாக்கப்படுதம் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

பல வருடங்களாக எந்தவொரு அரபு அரசாங்கமோ, ஆட்சியாளர்களோ யுத்தத்தின் மூலமோ, பேச்சுவார்த்தைகளின் மூலமோ சாதிகக் இயலாத காரியத்தை பல முறை சாதித்து இறுதியாக இஸ்ரேலிய சிறைச்சாலையில் வாடிய கடைசி லெபனானிய போராளியையும் மீட்டெடுத்துள்ளனர் இன்னும் தங்கள் சக போராளிகளின் சடலங்கள் கூட யூத ஆக்கிரமிப்பு மண்ணில் இருக்கக் கூடாது என்று அவற்றையும் மீட்டெடுத்துள்ளனர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள். இன்னும் மீதியுள்ள போராளிகளின் சுதந்திரத்திற்கும் உறுதியளித்துள்ளனர். இந்த போராளிகளை வரவேற்க ஒட்டுமொத்த லெபனானே திரன்டு வீதிகளில் மக்கள் வெள்ளமாக நின்றது ஆச்சர்யமளிக்கின்றது.இந்நிகழ்வுகளை கண்டு கழித்து தொலைக்காட்சியை மூடியபின்னும், மேடையில் ஓங்கி ஒலித்து சமீர் கந்தாரின் குரலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் குரலும் இன்னும் எம் காதுகளில் ரீங்காரமிடுகின்றன!! ஆம்!! "இன்னும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்த்தீன மண்ணையும், பாலஸ்த்தீனர்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு அரபு மண்ணையும் மீட்டெடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு உறுதியிளத்தள்ளோம் அவர்களின் சுதந்திரம் உறுதியாக்கப்படுதம் வரை எங்கள் போராட்டம் தொடரும், நாங்கள் தோற்க்கடிக்கப்பட்ட காலங்கள் மலையேறிவிட்டன...இனி வெற்றிகள் மட்டுமே எம்மை தொடரும்...." தொடரட்டும் இவர்களின் போராட்டம் இந்த மாவீரர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்று ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்த்தீனத்தின் கடைசி அங்குல நிலத்தையும் மீட்கும் வரை இறுதி யூதனை கப்பலேற்றி வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பும் வரை தொடரட்டும் இவர்களின் போராட்டம். இவர்களின் போராட்டத்தில் வெல்ல நாம் வாழத்துவோம், பிறார்த்திப்போம்!! வாழ்க பாலஸ்த்தீன சுதந்திர போராளிகள்!! வெல்லட்டும் பாலஸ்த்தீன் சுதந்திர போராட்டம்!!

நன்றி : முகவைத்தமிழன்

Monday, July 14, 2008

மக்களிடம் பொய்யுரைக்காதவர் இறைவன் விஷயத்தில் பொய்யுரைப்பாரா?

முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைத் தூதை நிரூபிக்கும் உறுதியான சான்றுகளுள் ஒன்றாக மன்னர் ஹெர்குலிசுக்கும் அபூசுஃப்யானுக்கும் இடையே நடந்த உரையாடல் அமைந்துள்ளது. அதனை இங்கு சமர்ப்பிக்கிறோம்.குறைஷிகளில் சிலர் ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள் (குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யான் அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்தார். அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார்.அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) 'அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், 'நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்' என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.புகாரி - ஹதீஸ் எண் 7 (சுருக்கப்பட்டுள்ளது)
அபூ சுஃப்யானுக்கும் ஹெர்குலிஸ் மன்னருக்கும் நடந்த உரையாடல் வருமாறு,

மன்னர் : உங்களில் அவரின் குலம் எத்தகையது?'
அபூ சுஃப்யான்: அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர்.

மன்னர் : இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?'

அபூ சுஃப்யான்: இல்லை.மன்னர்: இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா?

அபூ சுஃப்யான்: இல்லை

மன்னர் : அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?'

அபூ சுஃப்யான்: மக்களில் சாமானியர்கள் தாம்.

மன்னர்: அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?'

அபூ சுஃப்யான்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.

மன்னர் : அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?'

அபூ சுஃப்யான்: இல்லை.
மன்னர் : அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?'
அபூ சுஃப்யான்: இல்லை.மன்னர் : அவர் வாக்கு மீறியது உண்டா?அபூ சுஃப்யான்: இல்லை, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. (பின்னர் அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! என்று குறிப்பிட்டுள்ளார்.)

மன்னர் : அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?அபூ சுஃப்யான்: ஆம் மன்னர் : அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன?அபூ சுஃப்யான்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம்.

மன்னர் : அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?அபூ சுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம்விட்டுவிடுங்கள்' என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.
மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது;'அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன். இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும் வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது). அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன்.
அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர். நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) என்னுடைய இரண்டு பாதங்களுக்குமுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகு விரைவில்) தோன்றுவார் என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்'.பதி நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு நாட்டின் மன்னருக்கும் ஒரு கோத்திரத் தலைவருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தைப் பறை சாற்றம் சரித்திரச் சான்றாக இன்றும் மிளிர்கிறது. இதனால் தான் கூறுகின்றோம், இதற்குப் பின்னரும் அவர்களின் தூதை மறுப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

Sunday, July 13, 2008

அறியப்படாத அமெரிக்கா

ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.
சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.
ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.
இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.
1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.
இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர். ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.
நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன. அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும். ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.
அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது. மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது

Friday, July 11, 2008

Communist China's suppression of Muslims - another proof

China closes 41 mosques as ‘threat of jihad’ rises
Saibal Dasgupta TNN
Beijing: Chinese authorities have replaced top police and security officials in the Muslim dominated Xinjiang province, which is the hotbed of separatism and political violence.They have also closed down 41 “illegal” places of worship. These places of worship were used as training ground for conducting a “holy war”, Chen Zhuangwei Chen, the police chief of Urumqi, capital of the Xinjiang province, said. Xinjiang, which borders central Asia and Pakistan, has been the scene of a pro-independence movement by a section of the eight million Uighurs living there for a long time. The authorities also announced they have detained 82 “suspected terrorists” in the past six months in view of fears that they might disrupt the Olympic Games. They belong to five groups that “allegedly plotted sabotage against the Beijing Olympics,” the official Xinhua news agency quoted the police chief in Urumqi, Xinjiang’s capital, as saying. The government has announced the replacement of army and security officials in the ranks of three deputy core commanders, a political commissisar and the head of the Communist Party organisation department in the army. The replacement suggests that the central government has been unhappy about their inability of local officials to put down the surging separatism in the province.The new head of the organisation department is Liu Xiang Song, the government announced. One of the three new core commanders is Hanabati Sabukhaya, an officer from the Kazak race.

Source : Times of India dated 11th July 08

Wednesday, July 9, 2008

குழந்தைகளுக்கான நல்வழிக் கதைகள்!!

Thanks to Brother Abdul Rahman for his excellent article for children

1. அல்லாஹ்வோடு செய்துகொண்ட வாக்குறுதி
அனஸ் இப்னு நழ்ரு என்பது அவருடைய பெயர்.மிகவும் இறைநம்பிக்கை உள்ள நபித்தோழர்.இஸ்லாமை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக எதிரிகள் தொடுத்த முதல் போரான பத்ருப் போரில் அவர் கலந்து கொள்ளவேண்டும்.ஏதோ காரணத்திற்காக வெளியூர் சென்று இருந்தால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.அது அவருடைய மனதை மிகவும் வாட்டிக் கொண்டே இருந்தது.பத்ருப் போரில் கலந்து கொள்ளாததை மிகப்பெரிய இழப்பாக அவர் கருதினார்.எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இறைநம்பிக்கை எப்படிப்பட்டது என்று கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவேன் என்று அவர் அடிக்அடி கூறுவது வழக்கம்!இப்படிப்பட்ட நேரத்தில்தான் உஹதுப் போருக்கான அழைப்பு வந்தது.முஸ்லிம்கள் எல்லாம் கச்சை கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானார்கள்;.அனஸ் இப்னு நழ்ரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்.அவரும் ஸஅது இப்னு அபி வக்காஸூம் ஒன்றாகச் சேர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.சற்று தூரத்தில் எதிரிகளோடு முஸ்லிம்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்.நடந்து கொண்டிருந்த அனஸ் சட்டென்று நின்றார்.ஷஷஸஅத்! சொர்க்கத்தின் வாசம் வீசுகின்றதா?சொர்க்கத்தின் வாசத்தை நீ உணரவில்லையா?அனஸ் என்ன சொல்கிறார் என்று ஸஅதுக்கு உடனேபுரியவில்லை.ஷஷஅதோ! உஹது மலைக்குப் பின்னால் இருந்து சொர்க்கத்தின் வாசம் வீசுவதை நான் உணர்கிறேன்! என்று அனஸ் கூறினார்.கூறியவர் அங்கேயே வெறுமனே நின்று கொண்டிருக்கவில்லை.தன்னுடைய வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் பாய்ந்துவிட்டார்.எதிரிகளோடு மிகவும் வீரதீரத்தோடு போரிட்டார்.ஷஷஇவரைப் போல இன்னொரு வீரர் யார் இருக்க முடியும்?என்று எல்லோரையும் கேட்க வைத்தார்.ஷஹீதாகத் தயாரானவர்தானே சொர்க்கத்திற்கு ஆசைப்பட முடியும்?ஷஹீத் ஆவது என்றால் சாதாரண விஷயமா? இன்றைக்கு யார்யாரையோ ஷஹீத் என்று சொல்லி விடுகிறார்கள்.அவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஷஹீத்கள்தானா என்பதை இறைவன் தான் அறிவான்.இ;ஸ்லாமுக்காக வாழத் துணிந்தவன் தான் சாகவும் துணிவான்.அல்லாஹ் காட்டிய வழிமுறைகளின்படி வாழ்ந்து காட்டுபவனால்தான் அல்லாஹ் கூறிய முறைப்படி சாகவும் முடியும்.எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்த அனஸின் உடலில் ஏராளமான காயங்கள் ஏற்பட்டன.எதிரிப்படை வீரர்கள் பலபேரை அவர் வீழ்த்தினார். அவருடைய உடல் எங்கும் காயங்கள்: காயங்கள்!ஒன்றுஅல்ல, இரண்டுஅல்ல, என்பத்தி இரண்டு காயங்கள் அவருடைய உடலில் இருந்தன.அவருடைய உடல் தளர்ந்தது: உயிர்மூச்சு ஓய்ந்தது.இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன் போர் முடிந்துவிட்டது.இஸ்லாமுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்கள் எல்லாம் ஷஹீதுகளாக கீழே வீழ்ந்து கிடக்கிறார்கள்;.தன்னுடைய சகோதரனுடைய நிலை என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று கவலையோடு அனஸூடைய சகோதரி ருபய்யிஃ போர்க்களத்திற்கே வந்துவிட்டார்;.ஒவ்வொரு சடலமாக பார்த்துக் கொண்டே வருகிறார்.அனஸைக் காணவில்லை. மீண்டும் உன்னிப்பாக ஒவ்வொரு சடலத்தையும் பார்க்கிறார்.அனஸ் எங்கே விழுந்து கிடக்கிறார் என்றே அடையாளம் தெரியவில்லை.ஓரிடத்தில் உயிரற்ற உடல் ஒன்று கிடக்கின்றது.பார்த்தால் அனஸ் போலவே தெரிகின்றது.ஆனால், முகம் முழுக்க வெட்டுக் காயங்கள்.ஆள் யார் என்றே அடையாளம் சொல்ல முடியாது.அனஸ்தான் இது என்று அவருடைய உள் உணர்வு சொல்கின்றது.அந்த உடலின் கைகளைத் திருப்பிப் பார்த்தார்.அல்லாஹூஅக்பர்!! ஆம், அனஸேதான் இது!! அனஸ் ஷஹீதாகிவிட்டார்;.அனஸ் வெற்றி பெற்றுவிட்டார்.அனஸ்; அல்லாஹ்வோடு செய்த வாக்குறுதியை முழுமையாக்கி விட்டார்.அதுமட்டுமல்ல, வான்மறை குர்ஆனிலும் இடம் பெற்றுவி;ட்டார்.அல்லாஹூ அக்பர்.அல்லாஹ்விடம் தாங்கள் செய்துகொண்ட வாக்குறுதியை உண்மையாக்கி விட்டவர்கள் முஃமின்களில் இருக்கிறார்கள். ஒருசிலர் தங்களுடைய நேர்ச்சையை முழுமையாக்கி விட்டார்கள்: இன்னும் சிலரோ, அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33;:23)
2. சொத்தும் வேண்டாம்: சுகமும் வேண்டாம்!
ஸூஹைப் என்பது அவருடைய பெயர். அப்லா என்ற ஊரில் அவருடைய தந்தை பாரசீக நாட்டின் அதிகாரியாக இருந்தார்.ஒருமுறை ரோம நாட்டினர் அந்த ஊரின் மீது படை எடுத்தார்கள்.பாரசீக நாட்டுப் படையைத் தோற்கடித்து ஸூஹைபை கைதியாக பிடித்துக் கொண்டார்கள்.மக்கா மாநகரில் அடிமையாக ஸூஹைபை விற்றுவிட்டார்கள்.பின்னர் எப்படியோ ஒருவழியாக விடுதலையாகி அங்கேயே வாழ்ந்து வந்தார்.தங்க நகைகள் செய்யும் தொழிலை செய்து வந்தார்.புகழ்பெற்ற ஆசாரியாக மாறிவிட்டார்.ஏராளமான செல்வத்திற்கும் சொத்துக்களுக்கும் சொந்தக் காரராக மாறினார்.இஸ்லாமியப் பிரச்சாரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம் ஆரம்பித்தபோது அதுதான் சத்தியம் என்பதை உணர்ந்து எற்றுக் கொண்டார்.முஸ்லிமாக மாறிவிட்டார்.மக்கா நகரத்து மக்கள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடவில்லை.தொந்தரவுகளையும் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.முஸ்லிம்களாக வாழவேண்டுமென்றால் அடி உதைகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற நிலையே நிலவியது.எத்தனை நாளுக்குத்தான் கஷ்டங்களையும் அடி உதைகளையும் தாங்கிக் கொண்டு இருப்பது?முஸ்லிம்கள் வசிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கினர்.முதலில் அபிசீனியாவுக்கு சென்றார்கள்.பிறகு, மதீனாவுக்குக் கிளம்பினார்.ஸூஹைபும் மதீனாவுக்குக் கிளம்பினார்.தன்னுடைய எல்லா சொத்துக்களையும் விற்று மூட்டையாகக் கட்டிக் கொண்டார்.ஒட்டகத்தின் மீது சாமான் செட்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிவிட்டார்.மக்கா நகரைத் தாண்டி மதீனா நகரை நோக்கி போகலானார்.திடீரென்று குதிரைகளின் குளம்பு ஒலி கேட்டது.அவரை நோக்கி வெகுதூரத்தில் பல குதிரைகள் வந்துகொண்டிருந்தன.இதோ, குதிரைகள் அவரை நெருங்கி வந்து நின்றுகொண்டன.ஷஷஎங்கே போகிறீர்கள் ஸூஹைப்? என்று வந்தவர்களில் ஒருவன் ஸூஹைபைப் பார்த்துக் கேட்டான்.ஷஷநானா? நான் மதீனாவுக்குப் போய்க் கொண்டுள்ளேன்!நான் முஸ்லிமாக வாழ விரும்புகிறேன்.என்னால் இங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.ஆகையால் தான் மதீனாவுக்குக் கிளம்பி விட்டேன்.என்றார் ஸூஹைப்.ஷஷஅப்படியா! அப்படியென்றால் இந்த சொத்துகளை எல்லாம் இங்கேயே இறக்கி வைத்துவிட்டுச் செல்!-என்றான் இரண்டாவதாக இன்னொருவன்.ஒன்றும் புரியாமல் அவனையே உற்றுப் பார்த்தார் ஸூஹைப்.ஷஷஎன்ன நான் சொல்வது உனக்கு விளங்கவில்லை?நீ ஓர் அடிமையாக எங்கள் ஊருக்கு வந்தாய்.இங்கேயே தொழிலைக் கற்றுக் கொண்டாய்.ஏராளமான பணங்காசுகளை சம்பாதித்தாய்.இப்போது எங்கள் சமயத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளாய்.நீ சம்பாதித்த காசெல்லாம் எங்களுடையவை.எங்களுக்கே சொந்தமானவை.எங்கள் மதத்தைப் பின்பற்றுவதாக இருந்தால் இவ்வளவு சொத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு எங்களுடனேயே இருந்துவிடலாம்.இல்லை, மதீனாவுக்குப் போவதாக இருந்தால் எங்கள் ஊரில் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போ!!---என்றார்கள் வந்தவர்கள் அத்தனைபேரும்!!ஒரு நிமிடம் நின்றார் ஸூஹைப்.அவர்கள் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டுப் பார்த்தார்.கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார்:இதோ! இந்த இனைத்து சொத்துகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.ஷஷநான் ஒருக்காலும் என்னுடைய சமயத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக மாட்டேன்.வெட்டுஒன்று துண்டுஇரண்டு என்பதைப்போல தெளிவாக தன்னுடைய கருத்தை கூறிவிட்டார்.அவருடைய சொத்துகளை எல்லாம் அந்தக் காஃபிர்கள் பறித்துக் கொண்டார்கள்.வெறுங்கையோடு ஸூஹைபை அனுப்பிவிட்டோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டடார்கள்.ஆனால், உள்ளம் முழுக்க ஈமானை நிரப்பிக் கொண்டு ஸூஹைப் போனார்.அவருடைய கைகள் காலியாக இருந்தன.சொர்க்கமே அவருக்காக காத்துக் கொண்டு இருந்தது.நான் சம்பாதித்த பொருள்: இதைக் காட்டிக் காப்பது என்னுடைய உரிமை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.உரிமையை மீட்பதற்காக இஸ்லாமை இழந்துவிட அவர் தயாராக இல்லை.இஸ்லாமுக்குப் பதிலாக இந்த உலகமே கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து விடுபவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்! (அல்குர்ஆன் 2:207

நிலவின் இருப்பிடம்சேறல்ல, செவ்வானம்!

நிலவின் இருப்பிடம்சேறல்ல, செவ்வானம்!
சகோதரத்துவம் எனும் சொல்லை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இஸ்லாம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். சகோதரன் என்ற வார்த்தை உண்மையில் மிகப்பெரிய வார்த்தை! நம்முடைய நடைமுறை வாழ்வில் அதற்கு எந்தளவு மரியாதை இருக்கின்றது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.இறைவனை ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான இலக்கணத்தை குர்ஆன் வரையறுத்துள்ளது.أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ'நிராகரிப்பாளர்கள் விஷயத்தில் கடுமையாகவும் தமக்கிடையே கருணையோடும் நடந்து கொள்வார்கள்' (அல்குர்ஆன் 48 : 29).أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ'இறைநம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மென்மையாகவும் தாழ்பணிந்தும் இறை நிராகரிப் பாளர்களைப் பொருத்தவரை கடுமையாகவும் நடந்துகொள்வார்கள்' (அல்குர்ஆன் 5 : 54).ஒட்டுமொத்த சமூகம் எவ்வாறு திகழும் என்றால்...إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ'இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருப்பார்கள்!' (அல்குர்ஆன் 49 : 10).இன்றைக்கு இப்படிப்பட்;;;ட இஸ்லாமிய சமூகம் எதனையும் உலகில் வலைவீசித் தேடினாலும் பார்க்க முடியாது. இதற்கு நேர்மாற்றமான காட்சிகளை எங்கும் காணலாம். விமர்சனம் எனும் பெயரால் தரக்குறைவாக வசைபாடுவது, திட்டுவது, நா கூசும் தடித்த வார்த்தைகளை வரைமுறையின்றி பயன்படுத்து வது போன்றவற்றை தவிர்த்துவிட்டு இஸ்லாமியப் பணியாற்றுவோரைப் பார்ப்பது அரிதினும் அரிதாகி விட்டது.பாமர மக்களை விட்டுவிட்டு அறிஞர் பெருந்தகைகளான உலமாக்களை மட்டும் எடுத்துக் கொண்டாலும் நம்முடைய உள்ளத்தில் கசப்பே மிஞ்சுகின்றது. ஜம்இய்யத்துல் உலமாயெ ஹிந்த் அமைப்பு இருகூறாகப் பிளவுபட்டு முட்டிமோதிக்கொள்ளும் இந்நேரத்தில் இதைப்பற்றி அவசியம் பேசியே ஆக வேண்டும்.மார்ச் மாதம் ஆரம்பித்;த உலமாக்களின் போர் இன்னும் தொடருகின்றது. இரு குழுக்கள் மோதிக் கொண்டிருக்க இரண்டிலும் சாராத ஒருசில அறிஞர்கள் அமைப்பாக ஒன்று திரண்டிருக்கிறார்கள். ஜமாஅத்தை 'மதனீ'க்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய வேணவா!.உம்மத்துக்கு வழிகாட்டவேண்டிய உலமாக்கள் 'தாகூத்'திய நீதிமன்றங்களில் போய் தங்களுடைய வழக்குகளை வாதாடிக் கொண்டிருப்பதை கண்களால் காணும் கொடிய யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீதிவழங்கும் அரியாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர்கள் குற்றவாளிக் கூண்டு களுக்குள் 'நீதி'யை எதிர்பார்த்து நின்றுகொண்டிருக்கிறார்கள்.மேல்மட்டத்து உலமாக்களின் நிலை இவ்வாறு உள்ளது என்றால் இங்கே கீழ்மட்டத்திலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை!. ஒவ்வொரு முஹல்லாக்களிலும் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் பணியில் உலமாக்கள் ஈடுபடுவதை கண்களால் நேரிடையாகக் காணும் போது 'ருஹமாஉ பைனஹும்' என்பதை எண்ணி சிரிப்பாக வருகின்றது.வெறுப்பு, குரோதம், பொறாமை, புறம், கோள், கயமை, இரட்டைவேடம் போன்ற ஷைத்தானிய குணங்கள் உம்மத்தி;ல் தலையெடுக்காமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் ஆங்காங்கே ஏதேனு மொன்று தென்பட்டால் ஓடிச்சென்று உடனடியாக அகற்றவேண்டிய கடமையும் உலமாக்களுக்கல்லவா உள்ளது?உலகப்பற்றில் உம்மத் ஆழ்ந்துபோய்விடாமல் தடுத்து நிறுத்தி ஆஃகிரத் பாதையில் அவர்களை முன்னழைத்துச் செல்லும் பொறுப்பை சுமக்கவேண்டிய அறிஞர் பெருமக்கள் அதற்கு நேர்எதிர் திசையில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளதைக் காணுங்கால் உள்ளம் நொறுங்குகின்றது. இந்தக் கொடுமையை எங்கேபோய் சொல்லி அழ?வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளில் 'நஸீஹா' பண்ணாமல் அரசியல்வாதிகளுக்கு இணையாக ஃபிக்ஹுவை அடிப்படையாக வைத்து பிரிந்துசென்றுவிட்ட குழுக்களை விமர்சனம் செய்யும் போக்கு இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் காணத்தானே செய்கிறோம்?அறிஞர்பெருமக்கள் மீதான விமர்சனமான இதனை எடுத்துக்கொள்ளாமல் உம்மத் சீர்கெட்டுப் போனதற்கான காரணங்களை ஆராயும் 'இஹ்திஸாப்' ஆக எடுத்துக் கொள்ளவேணடும் எனும் கோரிக்கையையும் ஈங்கு தாழ்மையுடன் வைக்கிறேன்.இன்றைக்கும் எத்தனை எத்தனையோ விஷயங்களை உலமாக்களிடம் இருந்துதான் உம்மத் கற்றுக் கொள்கின்றது. சரியான விஷயங்கள் உம்மத்தினரின் மனங்களில் விதைக்கப்பட்டால் விளைச்சலும் அமோகமாக ஆஹாஓஹோவென்று இருக்கும். இல்லையெனில், மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியல் செய்யும் கொடுமையிலிருந்து விடுதலையே கிட்டாது.வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளை பயன்படுத்தாமல் வீணடிக்கும் போக்கு பல சான்றோர்கள் பன்முறை குறிப்பிட்டு வருந்தியபிறகும் சீரடைந்ததாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் எந்த விஷயமும் இல்லாது என்றிருக்கும்போது வருகின்ற மக்கள் தாமதமாகத்தான் வருவார்கள். அதனைத் தவிர்க்கவே முடியாது. அதுவும் முன்பத்தியில் குறிப்பிட்டுள்ளதைப் போல வெறுப்பையும் துவேஷத்தையும் தூவும் பேச்சாக அது அமைந்துவிட்டால் அப்புறம் கேட்கவே வேண்டாம்.அறிஞர் பெருமக்கள் எவ்வாறு இருப்பார்கள்;ளூ அவர்களுடைய அடையாளங்கள் என்ன என்பது குறித்தும் திருமறை குர்ஆன் கூறியுள்ளது.إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء'அல்லாஹ்வுடைய அடியார்களில் கற்றறிந்த அறிஞர் பெருமக்களே இறைவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள்' (அல்குர்ஆன் 35:28).இறையச்சத்தோடு திகழ்வார்கள். அதுமட்டுமல்ல, இறையச்சத்தை வளர்க்கவும் செய்வார்கள். இறைவனை ஏற்றுக்கொள்ளாதோரிடம் காட்டவேண்டிய கடுமையை நாம் நம்பும் அதே அல்லாஹ்வை நம்பி ஏற்றுக்கொண்டுள்ள சகோதரர்களிடம் காட்டுகிறோமே, இது சரியா? இதுதான் இஸ்லாமிய வழியா?இறைவனின் திருத்தூதர் நின்று உரையாற்றிய மிம்பர்மேடையில் நின்றுகொண்டு நம்முடைய ஃபிக்ஹ்வையும் அல்லது நமக்குப் பிடிக்காம அரசியல் செய்யும் முஸ்லிம் சகோதரர்களையும் விமர்சனம் எனும் பெயரில் திட்டித் தீர்க்கிறோமே, நாளை மறுமையில் நம்முடைய திட்டுக்கும் வசைவுகளுக்கும் ஆளான அந்த சகோதரர் நம்மையெல்லாம் மிஞ்சி அல்லாஹ்வின் நம்பிக்கையையும் அருட்கொடை களையும் பெற்று சொர்க்கத்தில் சிறப்பான இடத்தை பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறோம்?'உங்களில் ஒவ்வொருவரையும் நல்ல அபிப்பிராயத்தோடு சந்திக்கவே ஆசைப்படுகிறேன். ஆகை யால் யாரைப்பற்றியும் என்னிடம் அவரிழைத்த குறைகளைக் கூறவேண்டாம்' என்று இறைவனின் திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிச் சென்றுள்ளார்களே, அதற்கு பொருளே இல்லையா?இங்கு மட்டுமா இந்தக் கொடுமை? இணையத்தின் பக்கங்களைப் புரட்டினால் அங்கு வீசும் கவிச்சி நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. வளைகுடாவில் வேலை பார்க்கும் சகோதரர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கின்றது. அந்நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவிடுவதாக எண்ணிக்கொண்டு தங்களுக்குப் பிடிக்காதோரை வசைபாடுவதில் செலவளிக்கிறார்கள்.குழு அரசியலை இஸ்லாமியப் பணியாக எண்ணி ஏமாந்து போகிறார்கள். தமுமுகவிற்கும் ததஜவுக்கும் இடையிலான சண்டையை விலாவாரியாக விவரிக்கும் வலைப்பதிவுகளும் உள்ளன.மேலே 'என்னுடைய அடியார்கள்' என்று பெருமிதத்தோடு இறைவன் அறிமுகப்படுத்தும் இறையடியார்களுக்கும் நமக்கும் ஏதாவது பொருத்தம் இருக்கின்றதா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!அல்மாஇதாவில் அதே வசனத்தின் தொடக்கத்தில் அல்லாஹ் கூறுவதையும் கொஞ்சம் கேட்டுக் கொள்வோம்.يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللّهِ وَلاَ يَخَافُونَ لَوْمَةَ لآئِمٍ ذَلِكَ فَضْلُ اللّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ'இறைநம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை-நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்: அவர்களும் அல்லாஹ் நேசிப் பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளாடகளிடம் மென்மையாகவும் நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்: அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள் நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத் தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்'. (அல்குர்ஆன் 5:54).இறுதித்தூதரின் வாரிசுகளாகப் பணியாற்றவேண்டிய உலமாக்கள் அத்தூய மானுடர் தலைவரின் பண்புநலன்களுக்கும் பிரதிநிதிகளாகத் திகழவேண்டும். 'நான் அவ்விடத்தில் இருந்திருந்தால் ஃபிர்அவ்னின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்திருப்பேன்!' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஃபிர்அவ்னின் அந்திம காலத்தைப் பற்றிக் கூறும்போது குறிப்பிட்டுள்ளார்கள் அல்லவா?. பத்ருப்போரில் கைதானோரை என்ன செய்வது என்ற பிரச்சனை எழுந்தபோது அவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டுவிடலாம் என்று அபுபக்ரு சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு கூறியதைக் கேட்;ட அண்ணலார் 'நீங்கள் இப்றாஹீமின் பண்புகளைப் பெற்றுள்ளீர்கள்!' எனக் கூறினார்களா, இல்லையா?. அடுத்தவர்களைத் திட்டும் வேலையை வேறுயார் வேண்டுமானாலும் செய்யலாம். உலமாக்கள் செய்யக்கூடாது!.வழிகாட்டும் விண்மீன்கள் என்றால் வானத்தில் அல்லவா இருக்கவேண்டும்? சேற்றில் பிரதிபலிக்கும் நிலாவுக்கும் செவ்வானத்தில் தவழும் நிலாவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா?யாரோ ஒருவருடைய உலக வாழ்க்கைக்காக நாமேன் நமது ஆஃகிரத் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்?'லா அய்ஷ இல்லா அய்ஷல் ஆஃகிரா' என இறைத்தூதர் அடிக்கொருதரம் கூறியுள்ளதை நினைவில் பதித்து செயல்படுவோம். இன்ஷா அல்லாஹ்!.
Posted by Syed Abdur Rahman Umari

Saturday, July 5, 2008

Survey finds world’s top 10 intellectuals are Muslims

Survey finds world’s top 10 intellectuals are Muslims
US international affairs journal Foreign Policy says Turkey’s Fethullah Gülen voted top of its list of world intellectuals.
WASHINGTON - The bimonthly US international affairs journal Foreign Policy has just published a survey of the world’s top 20 public intellectuals and the first 10 are all Muslims.
Fethullah Gülen, who heads a network of schools and media that is probably the world’s largest moderate Muslim movement, came first.
Other Muslim religious personalities made the top 10 — weekly preacher on al-Jazeera satellite television Youssef al-Qaradawi (3rd), popular Egyptian television preacher Amr Khaled (6th), Iranian reformist theologian Abdolkarim Soroush (7th), and Swiss-born scholar Tariq Ramadan (8th).
Second was Muhammad Yunus, the Bangladeshi economist who won the 2006 Nobel Peace Prize for the microcredit project run by his Grameen Bank.
Several top-tenners besides Yunus made the list for their secular work.
Orhan Pamuk, the Turkish novelist who won the 2006 Nobel Prize for literature, came in fourth. Next was Aitzaz Ahsan, the Lahore lawyer whose lawyers’ protest movement is possibly the strongest voice of secular civil society in Pakistan. Ninth and tenth places went to Ugandan-born cultural anthropologist Mahmood Mamdani and Shirin Ebadi, the Iranian human rights lawyer who won the 2003 Nobel Peace Prize.
On the top 20 list were activist Noam Chomsky, former Vice President Al Gore, historian Bernard Lewis, Italian novelist Umberto Eco, welfare economist Amartya Sen, Newsweek International editor Fareed Zakaria, and chess grandmaster and a Russian democracy activist Gary Kasparov.
Half a million people visited the foreignpolicy.com site to pick their favorite candidate.
However, after the results, the journal’s editors said they are not convinced that all the intellectuals belong on top.
In their introduction in the July/August issue, the editors wrote: “Rankings are an inherently dangerous business,” as some candidates ran publicity campaigns on their web sites, in interviews or in reports in media friendly to them.
“No one spread the word as effectively as the man who tops the list,” the introduction said.
“In early May, the Top 100 list was mentioned on the front page of Zaman, a Turkish daily newspaper closely aligned with Islamic scholar Fethullah Gülen. Within hours, votes in his favor began to pour in,” the introduction added.
“His supporters—typically educated, upwardly mobile Muslims—were eager to cast ballots,” the journal noted.
Foreign Policy had chosen the 100 candidates, noting that they “were included on our initial list of 100 in large part because of the influence of their ideas."
Foreign Policy also conceded that "part of being a public intellectual is also having a talent for communicating with a wide and diverse public. This skill is certainly an asset for some who find themselves in the list's top ranks."

Source :http://middle-east-online.com/english/?id=26662

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?

ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?

'போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.
நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - 'The Prosecution of George W. Bush for Murder'. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ். ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை! சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி! ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது? அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்! இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு! ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும்! தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான்! உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?' என்கிறார்கள் இராக்கியர்கள்.குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே! போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார்? தலையாட்டி இராக் அரசாங்கமா? புஷ்ஷா? வரவிருக்கும் மீட்பர் ஒபாமாவா? நன்றி: ஆனந்த விகடன்.

Tuesday, July 1, 2008

In the lines of Prophet (sal)

நபிகளார் வரைந்த கோடுகளில்


"அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர் எல்லாம் அறிவுடையோரே" ( The Holy Quran 39 : 9)


இஸ்லாத்தை அதன் முழுமையான வடிவில் தெரிந்து கொள்ளும் விதமாக அதன் அடிப்படைகளான குரான், நபிமொழி, சீறத் மூலம் கொள்கை விளக்கங்கள் தலைப்பு வாரியாகவும்,

மறக்கடிகப்பட்ட சரித்திர உண்மைகளை வெளி கொணரும் வகையிலும்,

உள்ளங்களை தஷ்கியத் செய்யும் விதமாகவும்,

மூன்று மணி நேர பயிற்சி வகுப்பு நபிகளார் வரைந்த கோடுகளில் எனும் தலைப்பில் மாதம் தோறும் நடை பெறுகிறது.


Place : Masjid Ar-Rahman, Pallavaram

Date : 06th July 2008 Morning 10.00 - 1.00 pm sharp Insha Allah

Conductor : Brother Mohamed Ferozkhan

July Month Schedule

Topic : Aahirah - Life after Death

History : Salahuddin Ayyubi

Tazhkiya : Listening & Obeying

For location and more details please contact 9940455497 / 9840029491 / 9380501813

Attend with your friends.