Friday, October 31, 2008

'குண்டு வெடிச்சுருச்சா?.. பழியை, முஸ்லீம் மேல போடு!'-எஸ். அர்ஷியா

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு வியூகம் என்பது இரட்டைப் போக்காகவும், நேர்மையற்றதாகவும் இருக்கிறது. விவேகமற்ற முறையில், மதத்தின் மீது அது தொடுக்கும் தாக்குதல், பயங்கரவாதத்தின் வேர்களையும் அதன் போக்கையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகச் சித்தா¢த்து, பாரதீய ஜனதா கட்சி பலத்த குரலில் ஆதாரமற்று எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளுக்கு உடன்பட்டுப்போகும் மொன்னைத்தனத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைக்கொண்டு வருகிறது. 'பயங்கரவாதத்தை வேரறுக்கும் திராணியற்றவர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அந்தப்பதவிக்கு பொருத்தமற்றவர். பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்' என்று 'காவித்தனமாய்' அவை வைக்கும் கோ¡¢க்கைகளால் உசுப்பேற்றப்படும் பாட்டீல், தனது பதவியின் புஜ பலத்தைக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி, குயுக்தியான நடவடிக்கைளுக்கு மூலகர்த்தா ஆகியிருக்கிறார்.காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத் தின் தலைவரான வீரப்பமொய்லியோ, இன்னும் ஒருபடி மேலேபோய், பாரதீய ஜனதா கட்சியின் ஊதுகுழலாகவே மாறிவிட்டிருக்கிறார். 'பயங்கரவாத ஒழிப்புச்சட்டம் கடுமையாக, புதிதாகக் கொண்டு வரப்பட வேண்டும்' என்று, அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில், திருவாய் மலர்ந்து அரசுக்கு பா¢ந்துரை செய்கிறார். அந்தப் பா¢ந்துரை, பாரதீய ஜனதா கட்சியின் முக்கியக் கோ¡¢க்கைகளில் ஒன்றான கொடிய 'பொடா' சட்டத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒத்தே இருக் கிறது. போலீஸ் சொல்லும் செய்தியை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்கா¢த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவரது பா¢ந்துரை வலியுறுத்துவதாக இருக்கிறது.இதனடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பயங்கரவாத ஒழிப்பு நட வடிக்கைகள் அமைந்து வருகின்றன என்பது, தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின், இஸ்லாமிய சமூகத்துக்கு நெருக்கடியும், வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையும் அதிகா¢த்து வரு கிறது. அதன் ஒருபடிதான், செப்டம்பர் 19ம் தேதியின் பட்டப்பகலில், டெல்லி ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் முன்பு, அரசு தன் கோரமுகத்தைக் காட்டியதும்!டெல்லி போலீஸின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப்பி¡¢வு, ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் குடியிருந்த மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித் ஆகிய இரு இளைஞர்களை பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி சுட்டுக்கொன்றது. மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக வும் இரண்டுபேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ்தரப்பில் தொ¢விக்கப்பட்டது. 'இவர்கள்தான் நாட்டில் நடந்த, சமீபத்திய அனைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் திட்டமிட்டு நடத்தியவர்கள்' என்று அது வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் 'தனிப்பட்ட கவனத்தின்' போ¢ல் நடந்தேறியதாகச் சொல்லப்படுகிறது.இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற இந்தச்சம்பவம், ஊழல் மன்னனும் பெரும் பிளாக் மெய்லருமான ரஜ்பீர் சிங்கை, அன்ஸல் பிளாஸாவில் வைத்து, கொடூரமாகச் சிதைத்துக் கொன்ற என்கவுண்டரை போலவே இருக்கிறது.இதற்குமுன்பு, 35 பேரை என்கவுண்டா¢ல் 'போட்டு'த் தள்ளியதில் புகழ்பெற்ற 'இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவை, இந்த இருஇளைஞர்கள் சுட்டுக்கொன்றதால், அதன்போ¢ல் நடத்தப்பட்ட என்கவுண்டர் தாக்குதல் சம்பவம் இது' என்று போலீஸ¥ம், அரசும் ஒரேகுரலில் பொய்யாய்ப் புனைந் துரைக்கின்றன. 'நல்லதொரு போலீஸ் அதிகா¡¢யையே சுட்டுக்கொன்றுவிட்டார்கள்' என்று அரசின் நடவடிக்கைளுக்கு, பா¢தாபத்தை சம்பாதித்துக்கொள்ள முயன்ற அவர்களது புழுகுமூட்டை யுக்தி, தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகாரவர்க்கம் வெளியிடும் அறிக்கைகள், முற்றிலும் கட்டுக்கதைகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.அதிகாரவர்க்கம் வெளியிட்டிருக்கும் இன்னொரு கேலிக்கூத்து அறிக்கையைப் பார்ப்போம். வாரணாசி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. அதில் பாவப்பட்ட... ஒன்றுமறியாத அப்பாவி மக்களே பெரும்பாலும் உயி¡¢ழந்தனர். இந்தச்சம்பவங்களை நடத்தியது, இந்தியன் முஜாஹிதீனின் முக்கியத்தலைவரான அதீப் அமீன் என்கிறது, டெல்லி போலீஸ். ஆனால் மும்பை போலீஸோ, அதற்கு முற்றிலும் மாறாக... அனைத்துச் சம்பவங்களும் - டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் உட்பட - நான்குபேருடன் கைது செய்யப்பட்டுள்ள மொகம்மத் சாதிக் ஷேக்கின் திட்டமிடலின்படியே நடந்தேறியது என்று சாதிக்கிறது.இந்த முரணான அறிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும் தவறாகப் பிடிக்கப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ எனும் ஐயத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை மாதம் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதன் அடிப்படையில்தான் என்று எண்ணவும் தோன்றுகிறது.டெல்லி போலீஸ் சொல்லும் அறிக்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளன, வாரணாசி, ஜெய்ப்பூர், அஹமதாபாத் போலீஸ் சொல்லும் தகவல்கள். அந்தச்சம்பவங்களை முறையே வலியல்லாஹ், ஷாபாஜ் ஹ¥சைன், அபு பஷீர் மற்றும் அப்துல் சுபான் குரேஷி என்ற தவ்கீர் ஆகியோர் நடத்தியதாகச் சொல்கின்றன. இதில் தவ்கீர், மத்திய புலானாய்வுத்துறையினரால் 'சதித் திட்டங்களை தீட்டியவர்' என்ற வர்ணிப்புடன் பிரபல்யமாக்கப்பட்டவர்.இதில் அதீப் அமீனுக்கு, பஷீர் என்று இன்னொரு பெயரும் இருப்பதாக போலீஸ் திட்டமிட்டுச் சொல்லி வருகிறது. இதனை அதீப் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் அப்படி ஒருபெயர் அவருக்கு இருந்ததில்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர். இங்கு அதீப்பின் அடையாளத்துடன் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட இல்லாத நபரை அரங்கேற்றும் போலீஸின் அரக்கத் தன்மை காணக் கிடைக்கின்றது. டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்பு, அஜாம்கா¡¢லுள்ள யூனியன் பேங்க்கிலிருந்து அதீப் அமீன் 3 கோடி ரூபாயை எடுத்தாகவும், அதைக்கொண்டுதான் நிழல் நடவடிக்கைகளையும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியதாகவும் காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஊடகங்களின் விசாரணை, போலீஸின் பொய்யுரைகளை தண்டவாளத்தில் ஏற்றுகின்றன. ஜூலை மாதத்திலிருந்து செயல்படுத்தப்படாமலிருக்கும் அதீப் அமீனின் வங்கிக்கணக்கில் இருப்பதோ வெறுமனே 1,400 ரூபாய் தானாம்!ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் சமீபத்தில் குடிவந்த மொகம்மத் அதீப் அமீன், அதற்கு முறையாக பத்திரம் பதிவு செய்திருக்கிறார். அதை போலீஸ் ஆய்வு செய்திருக்கிறது. போலீஸால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் அவர்கள், உண்மையிலேயே பயங்கர வாதிகளாக இருந்தால், வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செயல்படுவார்களா என்ன?ஜாமியா நகர் என்கவுண்டர் சம்பவத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே அந்தப்பகுதி, போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே 'குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மூளை இவர்கள்' என்று, திட்டமிட்டு என்கவுண்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.ஜூலை 26 ம் தேதி அஹமதாபாத் குண்டு வெடிப்புச்சம்பவத்தில், குண்டுகளை வைத்ததாக போலீ ஸால் குற்றம்சாட்டப்பட்டு, அதீப் அமீனின் கூட்டாளியாக வர்ணிக்கப்படும் சாகிப் நிஸார், ஜூலை 22 ம் தேதியிலிருந்து 28 ம் தேதிவரை டெல்லியில் எம்பிஏ தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.என்கவுண்டர் சம்பவத்தை நோ¢ல்கண்ட பல சாட்சிகள், போலீஸ் வெளியிட்டிருக்கும் பொய் அறிக் கைகளைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். தி¡¢க்கப்பட்டுள்ள அந்தஅறிக்கையில், எதுவுமே உண்மையில்லை என்று அப்பட்டமாகியிருக்கிறது.சம்பவம் நடந்த அன்று, அதீப் அமீன் குடியிருந்த ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் போலீஸ் நுழைகிறது. நான்காவது தளத்திலிருக்கும் அந்தவீட்டிலிருந்து இரண்டுபேரை வலுக் கட்டாயமாக வெளியே இழுத்து வருகிறது. கிட்டத்தட்ட நூறுபடிகளுக்கும் மேலான அந்த குறுகலான நடைபாதையில் 'தரதர'வென்று இழுபட்டு வந்த அவர்கள், தரைப்பகுதியில் குவிந்திருக்கும் போலீஸ் முன்னால் நிறுத்தப்படுகின்றனர். பெரும் ஆயுதப்படையுடன் போலீஸ் அங்கே குவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கிய நபராக, 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவும் இருக்கிறார்.போலீஸ் காட்டிய வலுப்பிரயோகத்தில் இழுபட்டபோது நைந்து போயிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் நிற்கவே திராணியற்றவர்களாக இருந்தார்கள். அந்தப்பகுதியையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போலீஸ், நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இருவரையும் மேலும் நையப்புடைத்துத் தள்ளியது. போலீஸ் கும்பல் சுற்றிநின்றுகொண்டு 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் தலைமையில் அவர்களை வெளுத்துக் கட்டும்போது, போலீஸ்காரன் ஒருவனின் துப்பாக்கி ஒன்று, கூட்டத்தில் முழங்குகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள் 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவைத் தாக்குகிறது. ஷர்மா தரையில் வீழ்கிறார்.அதன்பின்பே கண்மூடித்தனமாக அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் எதிர்ப்பு காட்ட முடியாத point - blank range ல் சுட்டிக் கொல்லப்படுகின்றனர். சவக்குழியில் வைக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சாகிப் நிஸா¡¢ன் புகைப்படத்தில் தோளிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்த பெருந்துவாரங்கள் காணப்படுகின்றன. தலையின் முன்பகுதியில் குண்டுதுளைத்த நான்கு ஓட்டைகள் இருந்தன. தலையில் ஒருகுண்டு புகுந்தாலே உயிர்போய்விடும் என்று அறிவியலே சொல்லும்போது, அடுத்தடுத்து குண்டுகளை தலையில் செலுத்தியிருப்பது, போலீஸின் கடைந்தெடுத்தக் கோழைத்தனத்தையும் காட்டு மிராண்டித்தனத்தையும் ஒருசேர நமக்கு புலப்படுத்துகிறது.'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, ஹெட் லைன்ஸ் நியூஸ் சானலுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையை அந்த சானல் வெளியிட்டிருக்கிறது. அதில், நேருக்கு நேரான என்கவுண்டர் மோதலில் துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை என்றும் அவருக்கு பின்புறத்திலிருந்து வந்து துளைத்த குண்டுகள், பக்கவாட்டில் வெளியேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ¥ம், அரசும் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் சரமா¡¢யாகச் சுட்டதில் அவர் உயி¡¢ழந்ததாக பா¢தாபக் கதையை உருவாக்கி உலவவிட்டிருந்தது. அதுபோல அவர் மீது இளைஞர்கள் இருவரும் பலமுறை சுட்டதில் வயிற்றிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்ததாகச் சொல்லப்பட்ட இட்டுக்கட்டலும் பொய்யாகியுள்ளது.இந்தச்சம்பவத்தில் உயி¡¢ழந்த மோகன் சந்த் ஷர்மா உள்ளிட்ட மூவா¢ன் சடலங்களும் தடய அறிவி யல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதுபோலவே பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள்ளி ருந்த ஐந்துபோ¢ல் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுவது, மிகப்பொ¢ய புனைக்கதை! ஏனென்றால், தப்பி ஓடிச்செல்லுமளவுக்கு அங்கே விசாலமான வழி ஏதும் இல்லை. உள்ளே செல் வதற்கும் வெளியே வருவதற்கும் மிகக் குறுகலான ஒரே பாதைதான் உள்ளது.நேர்மைக்குப் புறம்பான போலீஸின் செயல்பாடுகளும், அதன் அறிக்கைகளும், மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கடப்பாடற்ற நடவடிக்கைகளும் நீசத்தனத்துடன் இருப்பதால், அரசையும் நம்பும்படியாக இல்லை. பாமர மக்கள் கூட அதை ஏற்கஇயலாது, வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையை உணர்ந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள கொடூரத்தை, கண்ணியமற்றச் செயல்களை சுதந்திரமான... நேர்மையான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தி, 'போலீஸ் சொல்வது சா¢தானா... அல்லது பொய்யா...' என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.சமீபத்திய சம்பவங்களால் ஒன்றுபட்டிருக்கும் இந்துத்துவ 'பயங்கரவாதி'களான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகள், தங்களை சுத்த சுயங்களாக்கிக் கொண்டுள்ளதாக வேடம் போடுகின்றன. சிறுபான்மையினத்தவருக்கு எதிரான வன்முறையையும் பயங்கரவாதத்தையும் அவைதான் அடையாளத்துடனேயே நடத்துகின்றன. அதற்கு போலீஸ¥ம் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களும் குடைபிடிப்பதுதான் கொடுமை! இந்த இந்துத்துவ பயங்கரவாதி கள்தான், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அசுர அட்டகாசத்தை, கொலைவெறியை, தீ வைப்பை, கற்பழிப்பை, சொத்துகள் சூறையாடலை ஒ¡¢சாவிலும், கர்நாடகத்திலும், மத்திய பிரதேசத் திலும், கேரளத்திலும் நடத்தியவை. அரசுகளின் ஒத்துழைப்பும் சதித் திட்டமுமின்றி இவற்றைச் செய்திருக்கவே முடியாது.பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாட்டில், இந்துக்கள் அல்லாத அப்பாவி மக்களை நூற்றுக் கணக்கில் கொன்று குவித்ததை ஒத்துக்கொண்டிருக்கும் அவர்களை, இந்துத்துவ பயங்கரவாதிகள் என்ற வார்த்தைக் கொண்டு யாரும் விளிப்பதே இல்லை. மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்தியவர்களை, தமிழ்நாட்டில் தென்காசியில் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களை, உத்தரபிரதேச மாநிலம் கான்பூ¡¢ல் குண்டுகளை விதைத்த காவிக்கும் பலை இந்துத்துவ பயங்கரவாதிகள் என்று அழைக்காமல், வேறு எப்படி அழைக்கமுடியும்?சிறுபான்மை இனத்துக்கு எதிரானக் கொடூரங்களில் ஈடுபடும் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அடையாளங்கண்டு கைது செய்யப்படும் சம்பவங்கள், எப்போதாவது அத்திப்பூத்தாற் போல நடந்து விடுகிறது. ஆனால் அவர்கள் தண்டனைக்குள்ளாவது, இந்தியாவில் மிகச் சொற்பமாகவே நடந்துள்ளது.அதேவேளையில், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று மதச் சிறுபான்மையினரை, சந்தேகத்தின் அடிப்படையில் கருணையற்ற முறையில் பிடித்துச்சென்று மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும், சட்ட விரோதமாகத் தண்டிப்பதும், சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், பல நேரங்களில் விசார ணையின்றி தண்டனை வழங்குவதும், கொல்லப்பட்டு விடுவதும் கூட வாடிக்கையாக உள்ளது.பயங்கரவாதம் குறித்த சொல்லாடல் வெளிப்படும்போதெல்லாம், அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் இரட்டைத்தன்மை முறையை கையாளுகின்றனர். பயங்கரவாதம் என்ற சொல், சிறுபான்மையினருக்கு எதிராகவே பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான பார்வையையே அது கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகவே இந்தப்பார்வை இருந்து வருகிறது. அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் அதைத் திரும்பத் திரும்ப பிரசாரம்செய்து, பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள் என்று அர்த்தம் கற்பித்து ஸ்திரப்படுத்திவிட்டது.அதைத் தெளிவுபடுத்துவதுபோல, கடந்த செப்டம்பர் 22 ம் தேதி, இந்திய ஊடகங்கள் அனைத்துமே பயங்கரவாதிகள் என்று 'கெப்•பியா' என்ற துணியால் அரேபியர்கள்போல முகம் மூடப்பட்ட மூன்று போ¢ன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அப்படி முகம் மூடி, துணி அணியச்சொல்லி அழைத்து வந்தது, டெல்லி போலீஸ். முகம் மறைக்கப்பட்ட மூவரும் பயங்கரவாதத்தை அரங்கேற்ற தேவை யான பொருட்களை வாங்கி சேகா¢த்துத் தந்தவர்களாம். இந்த இடத்தில் பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள். முஸ்லீம்கள் என்றால், சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஒசாமா பின்லேடனின் சொல்லை இங்கே நிறைவேற்றுபவர்கள் என்ற சமன்பாட்டை நிறுவ அரசு முயலுகிறது. ஒரு அரசுநிறுவனத்தால் குறிப்பிட்ட சமூகத்தை, அதன் வளமையை, தொன்மையை சிதைக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை.குண்டுவெடிப்பு சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தவுடன், சம்பவத்தை நோ¢ல் பார்த்த சாட்சியங்கள் சொல்லும் குறிப்பின்படி வரையப்பட்ட சிலபடங்கள் ஊடகங்களில் வெளியாகும். அவற்றின் கீழே அரபி வார்த்தையுடன் கூடிய ஒருபெயர் இருக்கும். அடுத்த சிலநாட்களில், அந்தப் பெயருக்கு¡¢யவர் கைது செய்யப்பட்டதாக செய்திவரும். இப்போது இடம்பெற்றிருக்கும் படத்திலிருப்பவர், 'கெப்•பியா' வோ... ஸ்கார்ப்போ... அல்லது பத்துரூபாய்க்கு விற்கும் பிளாட்பாரத்துண்டால் முகம் மூடியவராக இருப்பார். படத்தில் வரையப்பட்டவர் பிடிபட்டிருந்தால், அதை ¨தா¢யமாக... வெளிப்படையாக... 'அவர் தான், இவர்' என்று பகிரங்கப்படுத்தலாமே. புனைந்துரைக்கும் அரசு நிறுவனத்தால் அது ஒரு போதும் முடியாது. ஏனென்றால், படத்திலிருந்தவர் ஒருவராக இருப்பார். அவர் பெயா¢ல் பிடிக்கப் பட்டு வந்தவர் வேறு ஒருவராக இருப்பார். தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டிய முக்காட்டை, பிடித்துக்கொண்டுவந்த அப்பாவியின் மீது போலீஸ் போடுகிறது. அவ்வளவுதான்!ஏனென்றால், இந்திய அரசு சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் பாதுகாக் கத் தவறிவிட்டது. பெரும்பான்மைக் குழுக்களை காப்பதிலேயே அது கவனம்செலுத்தி வருகிறது. சிறுபான்மையினர் உ¡¢மை இழந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்ட அறிவு முகமையின் பெருந்தலைகள் உள்ளன. இந்துத்துவ பயங்கரவாதச் சாயத்தை தங்கள் மீது ஊற்றிக் கொண்டிருக்கும் அவர்கள், முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற அந்த அமைப்புதான் இதைச் செய்தது ... அதைச் செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது அதிலிருந்து மாறி சுதேசிகளாகி விட்டனர். 'குண்டு வெடிச்சுருச்சா? ஏன் கவலைப்படுற? பழியைத்தூக்கி முஸ்லீம்க மேல போடு!' என்பதாக எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களையும் இந்துத்துவ கண்ணாடி மூலம் பார்த்து, முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் என்பதும், வெட்ட வெளிச்சமாகிவிட்டது.பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள Delhi's Special Cell, Maharastra's Anti - Terrorism Squad, Special Task Forces, உள்ளிட்ட அமைப்புகள் அந்தந்த மாநிலத்தில் சகல அதிகாரங்களையும் படைத்ததாக இருக்கின்றன. அதனாலேயே ஊழலும், சட்டத்துக்கு புறம்பான குற்றங்களும், வரம்புமீறிய செயல்களும் செய்பவர்களாக இந்த அமைப்புகளில் பணிபு¡¢பவர்கள் இருக்கின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி பொதுமக்களின் சொத்து களையும், பொதுச் சொத்துகளையும் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதத்தை விளைவித்து உள்ளனர். அதுபோல மனிதஉ¡¢மை மீறல்களையும் நீதிக்குப்புறம்பான செயல்களையும் செய்துள்ள அவர்கள், அரசுப்பணத்தில் பெருமளவு சொத்துகளை வாங்கியும் குவித்துள்ளனர்.இந்த சம்பவங்களுக்குப் பின்பு, சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான சமூக, பொருளாதாரத் தடைகள் அதிகா¢த்து வருகின்றன. பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்துக்குப் பின்பு, தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணம் வசூலிக்க அந்தப்பகுதிக்கு அனுப்புவதில்லை. பிஸ்ஸா டெலிவா¢ செய்யும் பையன்கள் அந்தப்பகுதிக்குள் செல்லவே பயப்படுகின்றனர். அந்தளவுக்கு போலீஸ், பல்வேறு பயங்கர மலிவான கதைகளைப் பரப்பிவருகிறது.பொதுச் சமூகத்திலிருந்து பிளவுபடுத்தப்பட்டுள்ள ஜாமியா நகர்வாசிகளுக்கு, டெல்லி நகராட்சியின் அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! இது மேலும்மேலும் மன வேறுபாடுகளுக்கே வழிசெய்யும். குறைகளையும் நீதிக்குப்புறம்பானவற்றையும் சீர்படுத்திவிடவேண்டும். இல்லாவிட் டால், சமூக இணக்கம், சகிப்புத்தன்மை, மனித உ¡¢மைகளை இழந்தவர்களாகி, நாகா£கமான நாடு என்ற சொல்லிலிருந்து விலகி, வெகுதூரம் வந்துவிடுவோம்.அதற்கான விலையை, நம்மால் கொடுக்க முடியாது

 குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!


Written by புதிய ஜனநாயகம் Friday, 03 October 2008 21:13

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.
சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன். ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன. இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர் எனக் கருதிய ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களை அழித்தொழிக்கக் கிளம்பியது.

அவர்கள் வேறுயாரும் அல்ல. இந்து மதவெறிஊட்டப்பட்ட குஜராத் மாநிலப் போலீசார்தான். பிணங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் உழைக்கும் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்துவரும் முகம்மது நகர் எனும் சேரிப் பகுதியில் போலீஸ் பட்டாளம் புகுந்தது. எந்தவொரு விசாரணையும் இன்றி, அங்கிருந்தவர்களின் மேல் போலீசுப்படை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனான அசாருதீனின் நெற்றியில் குண்டு பாய்ந்து, கழுத்து வழியாக வெளியேறியது. இரத்தம் பீறிடக் கூக்குரலிட்டவாறே அசாருதீன் கீழே சரிந்தான். துப்பாக்கிச் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து சிறுவனின் அலறலையும் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த அவனது தாய் சகிலா பானுவோ, நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார். குடியிருப்பெங்கும் போலீசார் வெறித்தனமாக மக்களைப் பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்த அந்தப் பகல் வேளையில் எதிரி நாட்டுக்குள் படையெடுத்த இராணுவத்தைப் போல கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவர்கள் தாக்கினார்கள். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த சுலைகா என்ற வயதான பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். பல பெண்களுக்கு கைகளிலும், கால்களிலும் குண்டடிகள் பட்டன. முகம்மது ரபீக் எனும் இரயில்வே தொழிலாளி ஒருவர் அந்நேரம் பார்த்து தனது சைக்கிளில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கிய போலீசாரிடம், தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறித் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் பலனில்லாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் குடியிருப்பிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்த பிறகுதான், போலீசின் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நின்றது. போலீசைத் தொடர்ந்து வந்த துணை இராணுவத்தினர், போலீஸ் நடத்திவிட்டுச் சென்ற தாக்குதலால் அதிர்ச்சியுற்றவர்களாக, அடிபட்டுக் கிடந்த மக்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள்தான் அசாருதீனின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினர். ஆனால் அவர்களே, அசாருதீன் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே போட்டுவிட்டனர். அலுமினிய வார்ப்படத் தொழிலாளியான அசாருதீனின் தந்தை ஷேக் இமாமுதீன் தனது குடியிருப்பில் நடந்த போலீஸ் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்தார். தனது மகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு துடித்தார். பின்னர் அங்கு வந்த போலீசு உயரதிகாரிகள் மூலம் ஒரு ஆம்புலன்சைக் கெஞ்சிப் பெற்றுக் கொண்டு தனது மகனை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அசாருதீனைப் பரிசோதித்த மருத்துவர்களோ, அவன் இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனால் பிணவறைக்குப் பக்கத்தில் கிடத்தப் பட்டிருந்த தனது மகனின் உடலுக்கருகில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார் இமாமுதீன். திடீரென அசாருதீனின் உடலில் அசைவு தென்பட்டது. உடனே மருத்துவர்களிடம் ஓடி, தனது மகனுக்கு சிகிச்சை தரக் கோரினார். மகனை இழந்த துக்கத்தில் பிதற்றுவதாகக் கருதி அக்கோரிக்கையை மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினர். இமாமுதீன் அவர்களது காலில் விழுந்து கெஞ்சி தனது மகனைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார். இரக்கப்பட்ட மூன்று மருத்துவர்கள் அசாருதீன் உயிருடனிருப்பதை அறிந்து, அவனுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். மதத்தால் இந்துக்களான அவர்கள், மிகுந்த போராட்டத்திற்கிடையே அசாருதீனின் உயிரைக் காப்பாற்றினர். அவனது தாயும் மற்றொரு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு, இருவரும் வீடு திரும்பினார்கள். அசாருதீன் உயிர் பிழைத்த போதிலும், அவனால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவோ, தானே உணவருந்தவோ கழிவறைக்குச் செல்லவோ முடியாது. தீராத தலைவலியும், கண்பார்வைக் குறைவும், ஞாபக மறதியும் அச்சிறுவனை வாட்டின. மருந்துமாத்திரைகள், சிறப்பான சத்துணவுகள், சிகிச்சைக்கான செலவுகள் பெரும் சுமையாகி அவனது பெற்றோரை வதைத்தன. மகன் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தால், இமாமுதீன் தனது ஆலையில் "ஓவர்டைம்'' வேலை செய்தும், ஓய்வின்றி இதர சில்லறை வேலைகளைச் செய்தும் இச்செலவுகளை ஈடேற்றினார். தங்களது உணவுச் செலவுகளை பெரிதும் குறைத்துக் கொண்டு, அசாரின் பெற்றோர்கள் கடுமையாக உழைத்து அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் பலனாகவும், பெற்றோரின் பாச அரவணைப்பாலும் அசார் மெதுவாக எழுந்து நின்று நடக்கத் தொடங்கினான். படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளியான இமாம், தனது மகனை சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். குண்டடிபட்டு அதிசயமாக உயிர் பிழைத்து, ஐந்தாண்டுகளாக நடைபிணமாகக் கிடந்து, இன்று மெதுவாக நடக்கத் தொடங்கியுள்ள அசாரை கைத்தாங்கலாக அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அசாருக்கு தற்போது 17 வயது. பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் அவன் மிகவும் சிரமப்படுகிறான். நடக்கும்போது சில நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகிறான். இருப்பினும், அவன் மற்ற சிறுவர்களோடு பள்ளிக்குச் செல்வதைக் காணும் போது அசாரின் பெற்றோர்களது துயரமும் வேதனையும் மறைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தனது மகனையும், மனைவியையும் காரணம் ஏதுமின்றிச் சுட்ட போலீசாரின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் இமாம். ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ஆனால், போலீஸ் தரப்பில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அசாருதீனும் அவனது தாயாரும், இன்னும் கொல்லப்பட்ட, காயமடைந்த எல்லோரும் கூட்டமாக அருகிலிருந்த இந்துக் கோவில் ஒன்றைக் குண்டுவீசித் தகர்க்க வந்ததாகவும், அதனால்தான் அவர்களைச் சுட்டதாகவும் குற்றஞ்சுமத்துகிறது, அவ்வழக்கு. தனது மகன் சுடப்பட்டபோது, அவனுக்கு இந்து, முஸ்லீம் என்றால் என்னவென்று கூடத் தெரியாது எனக் கூறும் இமாமிற்கு, அவனைச் சுட்ட போலீசார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது. குஜராத் மண்ணில் முஸ்லிம் மதத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக வதைபடும் இலட்சக்கணக்கானவர்களின் துயரத்தில் ஒருதுளிதான், அசாருதீனின் அவலம். அசாருதீனைப் பெற்ற இமாமுதீன் குடும்பத்தைப் போலவே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முகம்மது நகர் சேரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம் குடும்பங்கள் ஏராளம். முகம்மது நகரில் கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம்கள், ஐந்தாண்டுகளுக்கு எவ்வித விசாரணையுமின்றிச் சிறையில் வதைபட்டனர். போலீசு தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் எதையும் காட்டாததால், ஓராண்டுக்கு முன்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, பொய்க்குற்றம் சாட்டி சிறையிலடைத்த கொடுஞ்செயலுக்காக எந்தவொரு போலீசுக்காரனும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. இதோ, அசாருதீன் தனது வேதனைகளை மறைத்துக் கொண்டு புன்முறுவல் பூக்கிறான். அவனுக்கு நேர்ந்துள்ள துயரத்துக்கும் வேதனைக்கும் காரணம் யார் என்பதை உணர்ந்து போராடுவதுதான், அசாருதீன் மீது நாம் காட்டும் பரிவுக்கு உண்மையான பொருளாக இருக்க முடியும். ("தி ஹிந்து'' நாளேட்டில் (செப்.7,2008) ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள "அசாரின் கதை''யின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்).

Wednesday, October 15, 2008

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை அருந்ததி ராய்

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை அருந்ததி ராய்
‘விடுதலை’ காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்த சுடர் இன்று கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இந்திய அரசு இனிமேலும் விடுதலையை மறுப்பது நயவஞ்சகம்.உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 5,00,000 ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் தங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கணமும் ‘வாழ்வா, குண்டடிப்பட்டு சாவா’ என்று கழியும் பயங்கரமாகன வாழ்க்கையை உதறித் தள்ள காஷ்மீரிகள் ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலத்தில் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று ஐ.நா.வில் நேரு அளித்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதி இரண்டு தலைமுறைகளாக அந்த மக்களின் நெஞ்சில் ஊசிகளைப் போல குத்திக் கொண்டிருந்தது.கடந்த 18 ஆண்டுகளாக காஷ்மீரில் வலுக்கட்டாயமாக ராணுவ ஆக்ரமிப்பை மேற்கொண்ட இந்திய அரசின் துர்கனவு தற்போது நனவுக்கு வந்துவிட்டது. தீவிரவாத இயக்கங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று வெற்றிப் பெருமிதத்துடன் அறிவித்துவிட்ட சூழ்நிலையில், இந்திய அரசுக்கு எதிராக சாத்வீகமான மக்கள் போராட்டம் தற்போது எழுச்சி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அரசு விழி பிதுங்கி வருகிறது.ஆண்டாண்டு காலமாக பத்தாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் படுகொலை, சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக’ செய்யப்பட்டு. நுற்றுக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்ட வலிகள் ஏற்படுத்திய நெருக்கடியால் இந்த எழுச்சி உருப்பெற்றுள்ளது. காஷ்மீரிகளின் மனதில் கனன்று கொண்டிருந்த அந்தக் கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டுவிட்ட சூழ்நிலையில் இனிமேல் எளிதில் அடக்க முடியாததாகவும், மாற்ற முடியாததாகவும், பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாததாக இருக்கிறது. கடந்து சென்ற ஆண்டுகள் முழுவதும் காஷ்மீர் மக்களின் குரலை சூழ்ச்சியால் அழிக்கவும், நசுக்கவும், பிரதிநிதித்துவப்படுத்தவும், தவறாக பிரதிநிதித்துவப்படுத்தவும், அவநம்பிக்கைக்கு உள்ளாகவும், இடையீடு செய்யவும், அச்சுறுத்தவும், விலைக்கு வாங்கவும், எளிமையாக அடக்கவும் இந்திய அரசு முயற்சித்து வந்துள்ளது. இந்திய அரசு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு அரசாகவும் இருக்கிறது. மிக அதிக அளவு பணம், மிக அதிக அளவு வன்முறை, தவறான தகவல் தருதல், பிரச்சாரம், சித்திரவதை, உடந்தையாளர்கள் மற்றும் உளவாளிகளின் விரிவான வலைப்பின்னல், பீதியை கிளப்புதல், சிறையிலடைத்தல், அச்சுறுத்திப் பணிய வைத்தல், தேர்தல் சூழ்ச்சி போன்றவற்றின் மூலம் ‘மக்களின் எண்ணத்தை’ தோற்கடிக்க முயற்சிக்கிறது என்று இந்திர அரசை ஜனநாயகவாதிகள் குறிப்பிடுவார்கள். வெற்றி உருவாக்கிய ஆதிக்க உணர்வால், துப்பாக்கி கூட்டத்துக்கு நடுவே இயல்புநிலையை உருவாக்கிவிட்டதாகவும், மக்கள் மௌனம் காப்பது சம்மதத்துக்கு அறிகுறி என்றும் இந்திய அரசு தவறாக நம்பிவிட்டது.‘வன்முறையால் காஷ்மீரிகள் அயர்ச்சி அடைந்துவிட்டார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்’ என்று மக்களின் சார்பாக பேசிய ‘அமைதியை உருவாக்கும் தொழிற்சாலை’ கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் எநவ்தவிதமான அமைதியை விரும்புகிறார்கள் என்பது பற்ற் எப்பொழுதும் விளக்கப்படவேயில்லை, பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட காஷ்மீர்/முஸ்லீம் தீவிரவாதிப் படங்கள் ‘காஷ்மீரின் அனைத்து துயரங்களும் பாவங்களின் வாசலில் கிடக்கின்றன. மக்கள் தீவிரவாதிகளை வெறுக்கிறார்கள் என்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பும் வகையில் மூளைச்சலவை செய்துவிட்டன. மிகவும் இருண்ட காலங்களில் கூட காஷ்மீர் மக்களின் மனதில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது. அந்த மக்கள் அமைதியை விரும்பவில்லை, விடுதலைதான் வேண்டும் என்று விரும்பினார்கள் என்பது சற்று நிதானமாக காது கொடுத்து கேட்டவர்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு மாதங்களாக வெறுக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுக்கு (இந்தியா, காஷ்மீர்) இடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி மக்கள், அவற்றை நரகத்தை நோசக்கி துரத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவிதியில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக, 100 ஏக்கர் காட்டுப் பகுதியை அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அளித்த விவகாரம், பெட்ரோல் கிடங்குக்குள் தீக்குச்சியை கொளுத்தி போட்டது போலாகிவிட்டது. 1989ம் ஆண்டு வரை, அமர்நாத் யாத்திரை வெறும் 20,.000 பேரை மட்டுமே ஈர்ப்பதாக இருந்தது. இரண்டு வார பயணம் செய்து யாத்ரிகர்கள் அமர்நாத் குகை கோயிலை அடைந்து கொண்டிருந்தனர். 19990ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாககில் இஸ்லாமிய தீவிரவாதிகள் எழுச்சி உருவான காலத்தில், இந்திய சமவெளியில் நச்சு இந்துத்துவ சக்திகள் பரவ ஆரம்பித்திருந்தன. இந்தச் சூழ்நிலை காரணமாக அமர்நாத் செல்லும் யாத்ரிகர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.2008ம் ஆண்டு, அமர்நாத் குகைக்கு 5,00,000 யாத்ரிகர்கள் வந்து சென்றனர். இதற்கு ஆகும் செலவை பெரும்பாலும் இந்திய வணிக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டிருந்தன. யாத்ரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்து மத அடிப்படைவாதத்தின் சார்பாக மாறி வந்த இந்திய அரசின் அரசியல் வெளிப்பாடு என்று காஷ்மீர் மக்கள் கருதத் தொடங்கினர். சாதகமாகவோ, பாதகமாகவோ நிலம் வழங்கும் நடவடிக்கை மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக மாறிவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட குடியேற்றங்களைப் போல, இங்கும் இந்து குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான விரிவான திட்டத்தின் தொடக்கப்புள்ளி இது என்றும், பள்ளத்தாக்கின் வரைபடத்தையே இது முற்றிலும் மாற்றவிடும் என்ற அச்சத்தையும் அரசின் இந்த நடவடிக்கை தூண்டிவிட்டது.இதையடுத்து தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நடைபெற்ற பெரும்மக்கள் போராட்டத்தின் விளைவாக பள்ளத்தாக்கில் அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டன. ஒரு சில மணி நேரங்களில், நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு போராட்டங்கள் பரவின. கல்லெறியும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி, ஆயுதமேந்திய காவல்துறையினரை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இந்த நிகழ்வுகள் 90களின் தொடக்கத்தில் உருவான எழுச்சியின் நினைவலைகளை ஒரே நேரத்தில் மக்களிடையேயும், அரசிடமும் தோற்றுவித்தது. தொடர்ந்து பல வாரங்களுக்கு போராட்டம், கடையடைப்பு, காவல்துறை துப்பாக்கிச்சூடு எல்லாம் நீடித்த வேளையில், மற்றொரு பக்கம் காஷ்மீரிகள் மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று இந்துத்துவ பிரசார பீரங்கிகள் முழங்கி கொண்டிருந்தன. இதற்கிடையில் 5,00,000 அமர்நாத் யாத்ரிகர்கள் சின்ன காயம் கூடப்படாமல் யாத்திரையை முடித்தனர். மாறாக, உள்ளூர் மக்களின் விருந்தோம்பலை அவர்கள் பெற்றனர்.ஆச்சரியமளிக்கும் வகையில் காஷ்மீர் மக்களின் மூர்க்கமான எதிர்ப்பை சந்தித்த அரசு, நிலம் வழங்குதலை ரத்து செய்தது. மூத்த பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா ஜீலானி ‘நிலம் வழங்குதல் ஒரு பிரச்னையே அல்ல’ என்று கூறியதற்குப் பிறகும், மேற்கண்ட எதிர்ப்பு கிளம்பியிருந்தது.நிலம் வழங்குதல் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ஜம்முவில் போராட்டங்கள் வெடித்தன. அங்கும்கூட, இந்த பிரச்னை எதிர்பாராத வகையில் பெரிதாக மாறியது. இந்திய அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், ஒடுக்குவதாகவும் இந்துக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரே சாலைத் தொடர்பு இது. ராணுவம் அழைக்கப்பட்டது. ஜம்மு ஸ்ரீநகர் இடையே சாலைப் போக்குவரத்து பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டது. ஆனால் காஷ்மீரி லாரி ஓட்டுநர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்ததாக பஞ்சாப் பகுதிகளில் இருந்து தகவல்கள் வந்தன. இதன் விளைவாக, லாரி ஓட்டுநர்கள் உயிருக்கு பயந்து, நெடுஞ்சாலையில் லாரி ஓட்ட மறுத்தனர். எளிதில் அழுகிவிடக் கூடிய பழங்கள் மற்றும் பள்ளத்தாக்கு உற்பத்திப் பொருட்கள் லாரிகளிலேயே அழுக ஆரம்பித்தன. சாலையை தடை செய்த இந்துத்துவவாதிகளின் நடவடிக்கை சூழ்நிலையை கட்டுமீறிப் போகச் செய்தது. நேர் எதிராக ‘சாலை தடை அகற்றப்பட்டுவிட்டது, லாரிகள் சென்று வருகின்றன’ என்று அரசு அறிவித்தது. இந்திய ஊடகங்களில் ஒரு பிரிவு, உறுதியான உளவுத் துறை தகவல்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி, இந்த சாலைத் தடை ரொம்பச் சிறியது என்றும், அப்படி ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறி வந்தன. ஆனால் இது போன்று விளையாடி கொண்டிருக்க இனியும் நேரமில்லை. ஏற்கனவே தேவையான ளவு சேதம் உருவாக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மக்கள் ஏற்கனவே வாழ்வதற்கு மிக மோசமாக அவதிப்பட்டுவிட்டனர். ராணுவ முற்றுகை, பசி, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்டுகள் தட்டுப்பாடு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அவர்கள், பேசாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம். உண்மையான தடைகற்கள் சாலையில் ஏற்பட்டதல்ல, இங்கே கூறியது போல உளவியல் ரீதியில் ஏற்படுத்தப்பட் ஒன்றுதான். ஏனென்றால் இந்தியா காஷ்மீர் இடையிலான கடைசி மெல்லிய தொடர்பு இழையும் துண்டிக்கப்பட்டிருந்தது.லட்சக்கணக்கான ஆயுதமற்ற மக்கள தங்கள் நகரங்கள், தெருக்கள், மொக்கல்லாக்களை மீட்டெடுக்க தெருவில் இறங்கிவிட்டனர். பயங்கர ஆயுதங்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையிலுஞம், நெஞ்சுரத்துடனும் கூடினர். காஷ்மீரில் எழுந்த காதை அடைக்கும் பெரும் கர்ஜனையை அமைதிப்படுத்த இந்திய அரசு மிகக் கடினமாக முயன்றது.ராணுவ முகாம்கள், சோதனை சாவடிகள், பதுங்கு குழிகளின் தேசமாகவும், சித்திரவதைக் கூடங்களில் இருந்து ஓலங்கள் ஒலிக்கும் நேரத்திலும் மக்கள் போராட்டத்தின் உண்மையான சக்தியை இளம் தலைமுறை திடீரென்று கண்டெடுத்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக கௌரவமாக தங்கள் தோள்களை நிமிர்த்தி, தங்களுக்காகவும், தங்கள் மக்களுக்காகவும் போராட அவர்கள் முன்வந்துள்ளனர். அவர்களைப் பொருத்தவரை இந்த தருணம் கடவுள் தங்கள் முன் தோன்றி வரம் தரத் தயாராக இருக்கும் தருணம் போன்றது. அவர்கள் முழுவீச்சுக்சுடன் இருக்கின்றனர். மரணம்கூட அவர்களது முன்னேற்றத்குக்கு முற்றுப்புள்ளி வைக்காது. மரண பயம் போய்விட்ட பிறகு, உலகிலேயே மிகப் பெரிய அல்லது இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை முன்னிறுத்தி என்ன பிரயோஜனம்? இதில் என்ன பயணம் வேண்டிக் கிடக்கிறது? காஷ்மீர் மக்கள் இன்று கையாளும் சாத்வீக போராட்ட முறையைக் கையாண்டுதான் தாங்களும் சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை இந்தய மக்களைத் தவிர வேறு யார் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்?காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள மக்கள் எழுச்சி, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றோ அல்லது தீவிரவாதிகளின் வற்புறுத்தலால் மக்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றோ புளித்துப்போன பழைய வாதத்தை முன்வைக்க முடியாமல் முடக்கியது. 30கள் தொடங்கி ‘காஷ்மீரி உணர்வை’யர் சரியாக வெளிப்படுத்தினார்கள் என்ற கேள்வி சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. அப்படி வெளிப்படுத்தியது ஷேக் அப்துல்லாவா? இஸ்லாமிய மாநாட்டு கட்சியா? இன்று யார் அதை வெளிப்படுத்துகிறார்கள்? முன்னணி அரசியல் கட்சிகளா? ஹ§ரியத்தா? தீவிரவாதிகளா? கேள்விகள் நீள்கின்றன.இதற்கு முன்பாகவும் பெரும் பேரணிகள் நடந்துள்ளன என்றாலும், இந்த முறை மக்கள் முழு சக்தியை வெளிப்படுத்தி போராடியதை உணர முடிந்தது. சமீபகாலத்தில் இவ்வளவு நீண்ட காலத்துக்கும், பரவலாகவும் மக்கள் போராட்டம் நடக்கவில்லை. இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களால் மிகவும் பாராட்டப்பட்ட காஷ்மீரின் இரண்டு முன்னணி அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சிம் வீதிகளில் இறங்கி போராடுவதற்கான துணிச்சலை பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்களிப்பவர்கள் விகிதம் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில், புதுதில்லியில் உள்ள தொலைக்காட்சி அரங்குகளில் நடந்த விவாதங்களில் கடமைக்கு பங்கேற்பதே அந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவிவந்த கடுமையான அடக்குமுறைக்கு இடையே விடுதலை வேள்வியை தீவிரவாதிகள் முன்னெடுத்து சென்று கொண்டிருந்த நிலையில், இன்று அவர்கள் பின்தங்கி விட்டனர். ஒரு மாற்றத்துக்காக இப்போது மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.பேரணிகளில் பேசிய பிரிவினைவாதத் தலைவர்கள், தலைவர்களாக இருந்தது மட்டுமின்றி, காஷ்மீரின் தெருக்களில் கொதித்தெழுந்த சீற்றம் மிகுந்த மக்களின் மாபெரும் சக்தியால் வழிநடத்தப்பட்டு, அதைப் பின்பற்றி நடக்கும் தொண்டர்களாகவும் இருந்தனர். முழுமையான புரட்சியை ஏற்று நடத்தும் தலைவர்களாக அவர்கள் இருந்தனர். இதில் உள்ள ஒரே கட்டுப்பாடு, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்டு நடக்க வேண்டும் என்பதுதான். மக்கள் விரும்பாதவற்றை பொது இடத்தில் கூற நேரிட்டால், பின்னர் கௌரவமாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். ‘தற்போது உருவாகியுள்ள மக்கள் இயக்கத்தின் ஒரே தலைவர் நான்தான்’ என்று சமீபத்தில் ஒரு பேரணியில் அறிவித்துக் கொண்ட சையது அலி ஷா ஜீலானி உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். எளிமையாக உடைந்துவிடக்கூடிய பல்வேறு சக்திகள் போராட்டத்தில் ஒருங்கிணைந்த நிலையில், அவரது கருத்து மிகப்பெரிய அரசியல் பிழை. ஒரு சில மணி நேரத்தில் கருத்தை அவர் மறுதலித்தார். விரும்புகிறோமா இல்லையோ, இதுதான் ஜனநாயகம். எந்த ஜனநாயகவாதியும் போலியாக நடித்து தப்பிக்க முடியாது.ஒவ்வொரு நாளுக்குப் பிறகும், பயங்கரமான நினைவுகள் நிழலாட ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களை மொய்க்கத் தொடங்கினர். பதுங்கு குழிகளை தகர்த்தனர். தடைகளை உடைத்தனர். ராணுவ வீரர்களின் இயந்திரத் துப்பாக்கிகளை நேருக்குநேர் சந்தித்து, இந்தியாவில் சிலர் மட்டும் விரும்பும் விஷயத்தை கூறினர். ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்றும், அதே அளவு எண்ணிக்கையிலும், அதே அளவு உக்கிரத்துடனும், ‘பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என்றும் அவர்கள் கோஷமிட்டனர். தகரக் கூரையில் படபடவென்று வீழ்ந்து தெறிக்கும் மழையின் ஒலியைப் போலவும், மின்னல் தாக்குவதற்கு முன் ஒலிக்கும் இடியின் ஓசை போலவும் பள்ளத்தாக்கில் இந்த கோஷங்கள் அதிர்ந்து ஒலித்தன. காஷ்மீர் மக்களிடம் நடத்தப்படாத ஒரு வாக்கெடுப்பின், நிரந்தரமாக ஒத்திவைக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு இந்த கோஷங்கள்.ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பக்ஷி மைதானத்தின் காலி இருக்கைகளில் ஆங்காங்கு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சில அதிகாரிகள் முன்னிலையில் ஆளுநர் என்.என்.வோரா கொடியேற்றினார். ஒரு சில மணி நேரத்துக்குப் பின்னால், நகரத்தின் முக்கிய பகுதியான லால் சௌக்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினர். ‘தாமதமான சுதந்திர தின வாழ்த்துகளை’ (ஏனென்றால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14), ‘அடிமைகள் தின வாழ்த்துக்களை’யும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும், காஷ்மீரின் அபு கிரெய்ப் வதைகூடங்களிலும், இப்படி நகைச்சுவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆகஸ்ட் 16ம் தேதி பாம்போர் என்ற கிராமத்துக்கு 3,00,000 மக்கள் பேரணியாகச் சென்றனர். ஜந்து நாட்களுக்கு முன் மோசமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹ§ரியத் தலைவர் ஷேக் அப்துல் அஜீசின் சொந்த கிராமம் அது. ஜம்முவுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் ஒரே பாதை இந்துத்துவவாதிகளால் தடுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீநகர்முசாபராபாத் நெடுஞ்சாலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நோக்கி நடந்த பெரும் பேரணியில் அவர் கொல்லப்பட்டார். காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு முன் அந்தச் சாலை சரக்கு, மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஆகஸ்ட் 18ம் தேதி, அதே எண்ணிக்கையில் திரண்ட மக்கள் ஸ்ரீநகரில் உள்ள டி.ஆர்.சி. மைதானத்தில் கூடி (அந்த அமைப்பு உண்மை மற்றும் அமைதி குழுவாகச் செயல்படவில்லை, சுற்றுலா வரவேற்பு மையல் போலவே செயல்பட்டது) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஜ.நா.ராணுவ கண்காணிப்பு குழுவிடம் மூன்று கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை கொடுத்தனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐ.நா.அ¬திப் படையை முன்னிறுத்த வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய ராணுவமும் காவல்துறையும் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறை செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர், உளவுத்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கலகம் ஏற்படுவதற்கு ஐ.எஸ்.ஐ.யின் சிறு குழுதான் காரணம் என்று அரசு நம்புவதாகவும், இந்த அதிரகசிய உளவுத்துறை தகவலை தங்கள் செய்தி அலைவரிசைகளில் ஒளிபரப்புமாறு ஊடகங்களிடம் அரசு கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் மிகவும் அபத்தமாக இருந்தாலும்கூட, தொலைக்காட்சி அலைவரிசைகள் அரசு வழிகாட்டுதலை கேட்டாக வேண்டிய நிலையில் இருந்தன. அப்படி அபத்தங்களை ஒளிபரப்புவதற்கு மத்தியில் குறைந்தபட்சம், இந்த மக்கள் புரட்சி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறதே, அதற்காகவாவது மகிழ்ச்சியடையலாம்.ஆகஸ்ட் 17ம் தேதி இரவு, ஸ்ரீநகரில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. சாலைகளில் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்த தடைகளில் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகருக்கு செல்லும் சாலைகள் தடை செய்யப்பட்டன. குப்கர் சாலையில் உள்ள ஐ.நா.ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்துக்கு பேரணியாகச் செல்லாமல் டி.ஆர்.சி.மைதானத்தில் உரையாற்றுமாறு 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஹ§ரியத் தலைவர்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்தது. ஏனென்றால், ஸ்ரீநகரின் குப்கர் சாலையில்தான் தடைகளை ஏற்படுத்தி இந்திய நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு சௌகரியமாகவும், பகட்டாகவும் வாழ்ந்து கொண்டிருந்தது.பள்ளத்தாக்கின் கிராமங்கள், நகரங்களில் இருந்து வந்த மக்கள் 18ம் தேதி காலை ஸ்ரீநகரில் குவியத் தொடங்கினர். டிரக், டெம்போ வேன், ஜீப், பஸ், கால்நடையாக என கிடைத்த வழிகளில் எல்லாம் வந்திருந்தனர். மீண்டும் தடைகள் உடைக்கப்பட்டன. மக்கள் தங்கள் நகரத்தை மீட்டெடுத்துக் கொண்டனர். இதை எதிர்கொள்ள காவல்துறைக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று விலகியிருப்பது அல்லது மக்களை படுகொலை செய்வது, காவல்துறை விலகி நின்றது. ஒரு தோட்டாகூட சுடப்படவில்லை.நகரமெங்கும் அலைகடலென புன்னகை வீசியது. எங்கும் மகிழ்ச்சிப் பரவசம் பரவியிருந்தது. படகு இல்ல உரிமையாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் பதாகைகள் வீற்றிருந்தன. ‘நாங்கள் அனைவரும் கைதிகள், எங்களை விடுதலை செய்யுங்கள்’ என்றது ஒன்று. ‘மற்றொன்றோ, ‘சுதந்திரம் இல்லாத ஜனநாயகம் வெறும் பேய் பிடித்த ஒன்று’ என்றது. இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கூறுகளை வலுப்படுத்திக் கொள்ள, மதரீதியிலான படுகொலையை கையிலெடுத்துக் கொண்ட அவலத்தை மேற்கண்ட வாசகம் உணர்த்துகிறது. அத்துடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப்பெரிய ராணுவ ஆக்கிரமிப்பை காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டு, தன்னைத் தானே ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தையும் குறிப்பிடுகிறது.ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஒவ்வொரு சினார் மரத்தின் உச்சியிலும் பச்சைக் கொடி பறந்தது. அதில் இந்திய வானொலி நிலைய கட்டடத்தில் ஒரு கொடி பட்டொளி வீசிப் பறந்தது. ஹஸ்ரத்பால், பத்மாலூ, சோபூர் ஆகிய வழிகாட்டி பலகைகள் அழிக்கப்பட்டன. ராவல்பிண்டி அல்லது பாகிஸ்தான் பாகிஸ்தான் வழிகாட்டிப் பலகைகளே அழிக்கப்படாமல் இருந்தன. பாகிஸ்தான் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள பாசம் என்ற பொது உணர்வு வெளிப்பாடு, பாகிஸ்தான் மீதான விருப்பத்துக்கு இணங்கிச் செல்லும் தன்மை கொண்டது என்று தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடும். இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் செயல்பாட்டை விடுதலைப் போராட்டம் என்று கருதுகின்றனர். இந்திய அரசோ தீவிரவாத பிரசாரமாகக் கருதுகிறது.பாகிஸ்தானை பெரும்பாலான காலம் சர்வாதிகாரிகள்தான் ஆண்டு வந்துள்ளனர்.தற்போது வங்கதேசமாக உள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இனக்குழுக்கள் இடையிலான போரால் தற்போது பிளவுண்டு கிடக்கும் பாகிஸ்தானிடம் இருந்து, காஷ்மீர் ‘விடுதலைப் போராட்டம்’ விலகிருயிருப்பதுதானே சரியாக இருக்கும் என்று கேள்வி எழுலாம். நேரெதிராக ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்தியாவை காஷ்மீர் மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர்.எங்கு பார்த்தாலும் பாகிஸ்தான் கொடிகள். எங்கு பார்த்தாலும் ‘பாகிஸ்தானுடன் எங்கள் பந்தம் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’, ‘சுதந்திரம் என்றால் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’ என்ற கோஷங்கள் ஒலித்தன.என்னைப் போன்ற முஸ்லிமல்லாதவர்களுக்கு சுதந்திரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விடப் போகிறது என்று ஓர் இளம்பெண்ணிடம் கேட்டேன். அவர் தோள்களை குலுக்கி விட்டு, “இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது? இந்திய ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்படுவதற்கான சுதந்திரத்தைத்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம், இல்லையா?” என்று பதிலிறுத்தாள். அவரது பதில் என்னை மௌனமாக்கியது.டி.ஆர்.சி.மைதானத்தில் பச்சைக் கொடிகளின் அணிவகுப்புக்கு மத்தியில் நான் நின்றபோது, என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய இயல்பு கொண்ட எழுச்சியைப் பற்றி சந்தேகம் கொள்ளாமல் இருக்கவே அல்லது அதை புறந்தள்ளாமல் இருக்கவோ முடியவில்லை. அதேநேரம் ஒரு கொடிய தீவிரவாதிகளின் ஜிகாத் என்றும் இதை முத்திரை குத்த முடியாது. காஷ்மீரிகளைப் பொருத்தவரை இது ஒரு தூய்மைப்படுத்துதல் நிகழ்வு. நீண்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த சதந்திரத்துக்கான போராட்டத்தில், அதற்கே உரிய அனைத்து நேர்த்தியின்மைகள், கொடுமைகள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்தக் கூடுகை ஒரு வரலாற்று திருப்புமுனை வாய்ந்த தருணம்.இந்தப் போராட்டம் மாசுபடாத ஒன்று எனக் கூறமுடியாது. இந்த மக்கள் எழுச்சியின் ஆரம்ப கட்டத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்பட்டது மற்றும் பள்ளத்தாக்கில் இருந்த ஒட்டுமொத்த பண்டிட் சமூகமும் வெளியேற்றப்பட்டதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. கோஷங்களை நான் கவனமாக காது கொடுத்து கேட்க ஆரம்பித்தேன். ஏனென்றால் பேச்சு அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தி, புரிதலுக்கான அனைத்து அம்சங்களையும் தருகிறது. காஷ்மீர் சாலை தடை செய்யப்பட்ட பிறகு ‘காஷ்மீரின் சந்தை ராவல்பிண்டிதான்’, ‘ரத்தம் தோய்ந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டை உடைப்போம், காஷ்மீரை ஒன்றிணைப்போம்’ என்றும், (இவை தவிர, இந்தியாவை அவமானப்படுத்தும்,, அவமதிக்கும் கோஷங்களும் இருந்தன), ‘ஒடுக்குபவர்களே, கொடியவர்களே, எங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’, ‘காஷ்மீர் எங்கள் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது, காஷ்மீர் எங்களுடையது’ என்று அந்த கோஷங்கள் ஒலித்தன.ஒரு கோஷம் என்னை கத்தி போல் வெட்டி, எனது இதயத்தை உடைத்தது, ‘பிச்சையெடுக்கிறது நிர்வாண இந்தியா, பாகிஸ்தானிலோ வாழ்க்கை சௌகரியமான ஒன்றுதான்’ என்றது அந்த கோஷம்.இந்த கோஷம் சகப்பதானதாகவும், கேட்க வலி மிகுந்ததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? இதைப் புரிந்து கொள்ள நான் முயற்சித்தேன். மூன்று காரணங்கள் தென்பட்டன. முதலாவது, இந்த கோஷத்தின் முதல் பகுதி மிகவும் கவலையளிக்கக் கூடியது, ‘வல்லரசாக உயர்ந்து வரும்’ இந்தியாவின் உண்மையான முகத்தை சுட்டுகிறது.இரண்டாவது, இந்தியர்கள் அனைவரும் நிர்வாணமாக, பிச்சையெடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, பல்வேறு சிக்கலான, வரலாற்று ரீதியில் கொடூரமான பண்பாட்டு மற்றும் பொருளாதார அமைப்புகள் இந்திய சமூகத்தை கொடூரமானதாகவும், இழிவான ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளன. மூன்றாவதாக, மிகவும் அவதிப்பட்ட காஷ்மீர் மக்கள், அதற்கு சற்றும் குறையாத வகையில் அதே ஒடுக்குபவரால் (இந்தியாவால்) பல்வேறு வகைகளில் அவதிப்படுபவர்களைப் பார்த்து கிண்டல் செய்வதைக் கேட்பது வலி மிகுந்த ஒன்றுதான். இந்த கோஷத்தில் இருந்து பாதிக்கப்படுவர்களே எப்படி குற்றம்புரிபவர்களாக மாறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.மரிவாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா ஜீலானி பேரணிக்கு வந்தபோது அவர்களுக்கு கூறப்பட்ட வாழ்த்தொலிகள் காதுகளை நிறைத்தன. ‘ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படவும், சிறையில் அடைக்கப்படவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவும் காரணமாக இருந்த ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், தொந்தரவுக்கு உள்ளான பகுதிகள் சட்டம், மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும்’ என்று மிர்வாய்ஸ் உமர் பாரூக் பேசினார். சையது அலி ஷா ஜீலானி, ‘குரான்தான் நமக்கு வழிகாட்டும். பாகிஸ்தான் காஷ்மீருடையது, அதைப் போலவே காஷ்மீர் பாகிஸ்தானுடையது.’ என்ற வகையில் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியத்தையும் கூட்டம் ஆமோதித்தது.இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அமைப்புகள் தங்களது மாறுபட்ட பார்வைகளுக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கருத்து, காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்பது ஜீலானியின் விருப்பம், மிர்வாய்ஸ் உமர் பாரூக்கோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளார்.சிவப்பு கண்கள் மினுமினுக்க என் அருகில் நின்றிருந்த ஒரு முதியவர் கூறினார், “காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்களிக் கொண்டன. எங்களுக்கு சுதந்திரம்தான் தேவை” என்றார். புதிய பங்கீட்டு விதியின்படி, இவர் கூறுவதை யாராவது கேட்பார்களா? இந்திய சமவெளிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் கர்ஜித்துக் கொண்டு ஓடிய லாரிகளின் உரிமையாளர்களும், அதை ஓட்டிய மனிதர்களுக்கும் வரலாறு பற்றியோ அல்லது காஷ்மீரைப் பறறியோ தெரியுமா என்று கூறமுடியவில்லை. இருந்தபோதும் லாரிகளின் பின்புறத்தில் அவர்கள் பதித்திருந்த தகடுகளில் “பாலைக் கேட்டால், வெண்ணெய் தருவோம், காஷ்மீரைக் கேட்டால், உன்னை இரண்டாகப் பிளந்துவிடுவோம்” என்று எழுதியிருப்பது குறித்து அந்த முதியவருக்குத் தெரியுமா?இந்த இஸ்லாமிய சக்தியின் இடத்தில் இந்துத்துவ சக்திகளைப் பொருந்திப் பார்த்தேன். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பயங்கரக்கனவாகத் திகழும், ‘கனவு இந்தியா’வின் தோற்றம் என் முன்னால் வந்தது.‘இதுதான் நமது எதிர்காலம்’ என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ‘முழுமையான வாழ்க்கையின் வழி’ என்ற பெயரில் ஒற்றை மதத்தை பின்பற்றும் அரசுகளின் கையில் சமூக, ஒழுக்க விதிமுறைகளை ஒப்படைக்க வேண்டுமா? இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் இந்துத்துவ திட்டத்தை நிராகரிக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் நிலவும் அன்பு, ஆர்வம், குறைகாணாத போக்கு, பெருமளவு உணர்ச்சிவசப்படும் குணங்களில் இருந்து இந்த நிராகரிப்பு உருவாகிறது. நமது அண்டை அயலார் என்ன செய்கிறார்கள், பிரச்சினைகளை எப்படி கையாளுகிறார்கள் என்ற அம்சங்கள் நமது வாதத்தை மாற்றுவதில்லை. மாறாக அது நமது வாதத்தை பலப்படுத்தவே செய்கிறது. அதேநேரம் இப்படி அன்பால் உருவாகும் வாதங்கள், ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். இஸ்லாமிய அமைப்பை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். (ஏனென்றால் குழப்பளிக்கும் வகையில் இந்துத்துவ கொள்கைக்கு எப்படி இந்துகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைக்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்). வன்முறை ஆபத்துகள் அடங்கிய நிலையில், பல்வேறு பார்வைகளை முன்வைக்கவும், தங்கள் கருத்தை கூறி விவாதிக்கவும் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த வகையான சமூகத்தை உருவாக்குவதற்காக போராடி வருகிறோம் என்பது பற்றிய சித்திரத்தை இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இப்போது தெளிவாக்க வேண்டும்.தியாகிகள், கோஷங்கள், மேம்போக்கான பொதுமைப்படுத்துதல்களைத் தாண்டி இவர்கள் மக்களுக்கு எதையாவது கொடுத்தாக வேண்டும். குரானை வழிகாட்டியாகக் கொள்ளும் விருப்பமுடையவர்களுக்கு அங்கு வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்று விரும்புபவர்கள் அல்லது குரானை வழிகாட்டியாக கொள்ளாதவர்கள் என்ன செய்வது? ஜம்முவில் உள்ள இந்துகள் மற்றம் இதர சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்குமா? தற்போது வெளியேறி மோசமான வறுமையில் வாடும் லட்சக்கணக்கான பண்டிட்டுகள், தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைக்குமா? அவர்கள் சந்தித்த மோசமான இழப்புகளுக்கு நஷ்டஈடு அளிக்கப்படுமா? அல்லது கடந்த 61 ஆண்டுகளாக காஷ்மீரிகளுக்கு இந்தியா செய்து வந் விஷயத்தையேதான், சுதந்திர காஷ்மீரும் சிறுபான்மையினருக்குச் செய்யுமா? அப்படியானால் ஓரினச்சேர்க்கையாளர்கள், கலப்படம் செய்பவர்கள், கடவுளை பழிப்பவர்களின் கதி என்னாகும்? இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் ஒழுக்க விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் திருடர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் என்ன ஆவார்கள்? சௌதி அரேபியாவைப் போல கொல்லப்படுவார்களா? மரணம், ஒடுக்குதல், அடக்குமுறை, படுகொலை என்ற துர்சுழற்சி இதற்குப் பிறகும் தொடருமா? காஷ்மீரின் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆராய்ந்து அறிய வரலாறு பல்வேறு மாதிரிகளை முன்வைத்திருக்கிறது. அவர்களது கனவு காஷ்மீர் எப்படியிருக்கும்? அல்ஜீரியா, இரான், தென்னாப்பிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, பாகிஸ்தான்... இவற்றில் எதைப் போன்றிருக்கும்?இந்த நெருக்கடியான தருணத்தில், கனவுகளைவிட வேறு சில விஷயங்களும் மிக முக்கியமானவை. சூழ்நிலையை தெளிவாகவும், நேர்மையாகவும் கணிப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் அறிவுச் சோம்பலையோ, தயக்கத்தையோ இந்தத் தருணத்தில் வெளிப்படுத்தக் கூடாது. 1947ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் செய்த பித்தலாட்டம் காஷ்மீரின் நவீனகால சோகம் என்றும், அதன் காரணமாகத்தான் இப்படி நினைத்துப் பார்க்க இயலாத படுகொலைகள் நிகழ்ந்தன. கிட்டத்தட்ட சுதந்திரமாக இருந்த மக்கள் நீண்டகால அடிமையாக இருக்க நேரிட்டது என்றும் யாராவது வாதிடலாம்.இதற்கிடையில் பிரிவினைவாத பிசாசு ஏற்கெனவே தலைதூக்கிவிட்டது. பள்ளத்தாக்கில் வாழும் இந்துக்கள் தாக்கப்படுவார்கள். வெளியேற்ற தூண்டப்படுவார்கள் என்று இந்துத்துவ அலைவரிசைகளில் புரளி பரவி வருகிறது. அதற்கு பதிலடியாக, ஜம்முவில் ஆயுதமேந்திய இந்து தீவிரவாதிகள் படுகொலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் இரண்டு மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட கொடூர நினைவுகள் மீண்டும் நினைவில் ஆடுகின்றன. அந்த கொடும் கனவு எப்பொழுதும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.மீண்டும் அதே வரலாறு இங்கும் நிகழும் என்று எதிர்பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி நிகழாதவரை, அதை நம்பத் தேவையில்லை. மேலும் அப்படிப்பட்ட கொந்தளிப்பை உருவாக்க மக்கள் வேறு வகையில் தீவிரமாக செயலாற்றிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த பயங்களை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த மக்களையும், காஷ்மீரையும் தொடர் ராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. ‘சுதந்திரத்தை அனுபவிக்க இந்தியர்கள் தயாராக இல்லை, அதனால்தான் சுதந்திரம் வழங்கவில்லை’ என்று காலனி ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய பழைய வாதத்தையே இது நினைவுபடுத்துகிறது.இந்திய அரசு காஷ்மீரின் மீது வைத்துள்ள பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் இந்தியா செய்து பார்க்கும். உறுதியான திட்டம் வகுக்கப்படாத நிலையில் தற்போது எழுந்துள்ள மக்கள் எழுச்சி மங்கிவிட வாய்ப்புள்ளது. தற்போது உருப்பெற்று வரும் எளிதில் உடைந்துவிடக்கூடிய கூட்டணியை உடைப்பதற்கு அது வழிகோலும். தற்போது எழுந்துள்ள சாத்வீக எழுச்சி மறைந்து, ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மீண்டும் போராடுவதற்கு அழைக்கப்படலாம். தற்போது 5 லட்சமாக உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அது 10 லட்சமாக மாற்றக்கூடும். சில தந்திரமான படுகொலைகள், இரண்டொரு திட்டமிட்ட படுகொலைகள், சில காணாமல் போகச்செய்தல்கள், ஒட்டுமொத்த கைது போன்றவை மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த மந்திர ஜாலத்தை நீட்டிக்கக்கூடும்.காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்படும் அளவு கொள்ளாத மக்கள் வரிப்பணம், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுடன் வறுமையில் உழலும் மக்களுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும், உணவுக்காகவும் செலவிட வேண்டியவை. அதிக ஆயுதங்கள், அதிக தடையேற்படுத்தும் வேலி கம்பிகள், காஷ்மீரில் சிறைகளுக்குச் செலவிடுவது சரியான ஒரு நடவடிக்கை என்று இந்திய அரசு எப்படி நம்புகிறது என்று புரியவில்லை.காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு நாம் அனைவரையும் அரக்கர்கள் ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இந்து ஆதிக்கவாதிகள் தாக்குவதற்கு உள்ள ஆபத்தான வாய்ப்பு, காஷ்மீர் முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தடை ஏற்படுத்துகிறது. இந்த விஷம் மிகுந்த சதித்திட்டம் நேரடியாக நமது ரத்தநாளங்களில் செலுத்தப்பட்டு அவ்வப்போது இடையீடுகளுடன் நிர்வகிக்கப்படுகிறது.இத்தனைக்குப் பிறகும் நம் அனைவரது மனசிலும் ஓர் நியாயமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. மக்களின் விடுதலையை பறிக்க எந்த அரசாவது ராணுவ படையை பயன்படுத்த உரிமை உண்டா?காஷ்மீரை இந்தியா விட்டொழிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலை பெறுவதும் மிகமிக முக்கியம்.தமிழில் : ஆதி வள்ளியப்பன் (நன்றி ‘அவுட்லுக்’ இதழ்)

Monday, October 13, 2008

காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் - சில குறிப்புகள்!

காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் - சில குறிப்புகள்!
1. இந்தியாவை இந்துப் பேரரசாக வளர்க்க முனையும் இந்து மதவாத ஆதிக்க அரசியலை இந்துத்துவம் என்றும் மதச்சார்பின்மை பேசும் இந்தியத் தேசிய ஆதிக்க அரசியலை இந்தியம் என்றும் குறிப்பிடுகிறோம். இந்துத்துவமும் இந்தியமும் முரண்பட்டவை போல் தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றே. அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு. இந்துத்துவம் நேரடியாகவும் இந்தியம் சுற்றடியாகவும் பார்ப்பனியக் கருத்தியலைச் சார்ந்திருப்பவை. இரண்டுமே தேசிய ஒடுக்கு முறையையும் சாதிய ஒடுக்குமுறையையும் செயல்படுத்துகிறவை.
2. பாசக - ஆர்.எஸ்.எஸ் - பஜ்ரங் தளம் - இந்து முன்னணி போன்றவை இந்துத்துவ அமைப்புகளில் தலையாயவை. இந்தியத்தின் தலையாய அமைப்பு காங்கிரசாகும். இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'மதச் சார்பற்ற' எதிர்க்கட்சிகளும், இந்தியத் தேசிய இடதுசாரிக் கட்சிகளும் இவ்வகையிலானவையே.3. காசுமீரச் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதில் இந்துத்துவமும் இந்தியமும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தாலும் உண்மையில் இரண்டின் நோக்கமும் ஒன்றே என்பதை இச்சிக்கலின் வரலாறு புலப்படுத்தும்.4. இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு சிறிது காலத்துக்குக் காசுமீரம் எப்பக்கமும் சேராமல் தனித்து இருந்து வந்தது. மக்களில் பெரும்பாலார் இசுலாமியர்களாகவும் மன்னர் அரிசிங் இந்துவாக இருக்க, இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே காசுமீரை இணைத்துக் கொள்ளும் விருப்பம் இருந்தது.5. காசுமீர மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக விளங்கிய சேக் அப்துல்லா காசுமீரத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டும். தேவையானால் தன்னாட்சித் தகுதியுடன் இந்தியக் கூட்டாட்சிக் குடியரசில் இணைந்திருக்கலாம் என்பதே அவர் திட்டம். பாகிஸ்தானுடன் காசுமீரத்தை இணைக்கும் எண்ணம் அவருக்குத் துளியும் இல்லை.6. இந்தியாவுடன் இணைவதால் முடியாட்சியை இழக்க நேரிடும் என்பதாலும் காசுமீரத்து மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பாததாலும் அரிசிங் இந்திய இணைப்புக்குத் தயங்கிக் கொண்டிருந்த போது, பாகிஸ்தானின் ஆதரவோடு வடமேற்குப் பழங்குடிகள் காசுமீர் மீது படையெடுத்தார்கள். மிரண்டு போன அரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி கோரினார். இந்தியப் படை காசுமீரத்தில் நுழைந்தது. அப்போது நுழைந்ததுதான் இன்று வரை வெளியே வரவில்லை.7. இந்தியப் படையுதவிக்கு நிபந்தனையாக அரிசிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அத்தோடு ஓடிப் போனார். காசுமீரத்தில் இந்திய இணைப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் இந்திய அரசு ஓர் உறுதி கொடுத்தது; இந்தியாவுடன் காசுமீரத்தின் இணைப்பு இறுதியானதன்று. இந்த இணைப்பு குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு காசுமீர மக்களின் விருப்பமறிந்து அதற்கேற்ப இறுதி முடிவு எடுக்கப்படும்.8. இந்தியாவுடன் காசுமீரத்தை இணைப்பதற்கு மகாராசா அரிசிங்கை இணங்க வைப்பதில் ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பங்கு வகித்தது. துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் கேட்டுக் கொண்டபடி ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் அரிசிங்கிடம் பேசி அவரை வழிக்குக்கொண்டு வந்ததாக இன்றும் இந்துத்துவவாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வர்.9. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. அவரைத் தன் விருப்பம் போல் வளைத்து இந்தியாவோடு காசுமீரத்தை முழுமையாக இணைப்பது நேருவின் நோக்கம். இந்துத்துவ ஆற்றல்கள் நேரடியாகவே காசுமீரத்தை ஒடுக்கி இந்தியாவுடன் இணைக்கக் கோரின. நோக்கம் ஒன்றுதான், வழிமுறைகள் வேறுபட்டன.10. 1948 சனவரி முதல் நாள் இந்திய அரசு காசுமீரச் சிக்கலை ஐ.நா. அமைப்புக்கு எடுத்துச் சென்றது. அங்கேயும் பொதுசன வாக்கெடுப்பு நடத்தியே காசுமீரத்தின் வருங் காலத்தைத் தீர்வு செய்வதாக வாக்களித்தது.11. காசுமீர மக்களின் விருப்பத்தைப் பொறுத்து முடிவெடுப்பதாகச் சொல்லிக்கொண்டே சம்மு-காசுமீரத்தை இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் போல் ஒரு மாநிலமாக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டது. இந்திய அரசமைப்புப் பேரவையில் காசுமீரப் பேராளர்களைச் சேர்த்துக் கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காசுமீரத்துக்கென்றே உறுப்பு 370ஐச் சேர்த்தது.12. 1951 நவம்பர் 15ஆம் நாள் இந்திய அரசு சம்மு-காசுமீரத்துக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால் இந்தத் தனி அரசமைப்புச் சட்டமோ 370ஆம் உறுப்போ காசுமீர மக்களின் உரிமை வேட்கையைத் தணிக்கவில்லை. அவர்களின் எழுச்சியை மடைமாற்றும் உத்திகளாகவே இவை பயன்பட்டுள்ளன. தந்திரவுத்தியெல்லாம் வேண்டாம், நேரடியாகவே அடக்கி நசுக்கு என்பது இந்துத்துவ நிலைப்பாடு. இங்கேயும் நோக்கம் ஒன்று, வழி முறைகளில் தான் வேறுபாடு.13. இந்திய அரசின் - பண்டித நேருவின் - சூழ்ச்சித் திட்டங்களுக்கு உடந்தையாக மறுத்ததால் சேக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் சில மாதங்கள் நீங்கலாக 11 ஆண்டு காலம் அவர் சிறையிலிருந்தார்.14. காசுமீரச் சிக்கலைத் தேசிய இனச் சிக்கலாக இந்தியாவும் கருதவில்லை, பாகிஸ்தானும் கருதவில்லை. இது இரு நாடுகளிடையிலான எல்லைச் சிக்கல் அல்லது ஆட்சிப் புலச் சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பார்வையில் இந்துத்துவமும் இந்தியமும் ஒன்றாகவே உள்ளன.15. காசுமீரத்தில் வாக்கெடுப்போ கருத்துக் கணிப்போ நடத்தாத இந்திய அரசு சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தியுள்ளது. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் - ஒன்றே ஒன்றைத் தவிர - மோசடியானவை. மோசடித் தேர்தல் நடத்தி காசுமீரத்தில் சனநாயகம் விளங்குவதாகக் காட்டுவதில் இந்துத்துவத்துக்கும் இந்தியத்துக்கும் வேறுபாடில்லை.16. இந்துத்துவமும் இந்தியமும் செயல்படுத்திய வஞ்சகம், மோசடி, ஏமாற்று, ஆணவம், அடக்குமுறை... இவற்றின் எதிர்வினையாகவே காசுமீரத்தில் 1987க்குப் பின் ஆயுதப் போராட்டம் மூண்டது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதன் பெயரால் இந்திய அரசு பெருமளவில் இராணுவத்தைக் குவித்துள்ளது. இறுதியாகப் பார்த்தால், காசுமீரத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருப்பது இந்தியப் படையே எனலாம். இந்த இராணுவ ஆட்சியை இந்துத்துவமும் இந்தியமும் நியாயப்படுத்தி வருகின்றன.17. அமர்நாத் திருப்பயணிகளுக்காக நிலம் ஒதுக்குவது தொடர்பான சிக்கலை, காசுமீர மக்கள், காசுமீரை இந்தியமயமாக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே கருதுகிறார்கள். ஜம்மு இந்துத்துவப் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடிகள் உயர்த்தப்பட்டது ஒரு சரியான குறியீடே. இந்துத் துவமும் இந்தியமும் காசுமீர மக்களின் தேசியப் பேரெழுச்சியை ஒடுக்குவதில் ஒன்றுபட்டுள்ளன.18. இந்துத்துவத்தை எதிர்க்க இந்தியத்துடன் ஒன்றுபடுவது எவ்வளவு பெரிய ஏமாளித்தனம் என்பதை காசுமீர் மக்களின் பட்டறிவு நமக்கு உணர்த்த வேண்டும்.
நன்றி : தமிழ்தேசம்

டெஹல்கா அறிக்கை - 2"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்!

"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்!
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் பொதுவாக, போர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்தான் பொதுமக்கள் இருப்பர். ஆனால், போர் தொடர்பான முடிவுகளை அரசியல் தலைவர்களே எடுக்கின்றனர். ஜனநாயகம், பாஸிஸ ஏகாதிபத்தியம், கம்யூனிஸத் தலைமை என எதுவாக இருந்தாலும் போரின் மீதான தங்களது அனுகூல நிலைபாட்டைப் பொதுமக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது அவர்களுக்கு இலகுவான காரியம். மக்களைத் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களுக்குச் சாதகமாகப் பக்குவப்படுத்தி எடுப்பதற்கு அவர்களால் இயலும். அதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், "அமைதி விரும்பிகளை தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குபவர்கள் என்றும் முத்திரை குத்துவதோடு, இவர்களால் மக்கள் ஆக்ரமிக்கப்படுகின்றனர் என்றும் திரும்பத் திரும்பக் கூற வேன்டியது மட்டுமே. எந்த நாடாக இருந்தாலும் இத்தந்திரம் நன்றாகச் செயல்படும்" - ஹர்மன் வில்லியம் கோரிங் - நாஸி கட்சித் தலைவர்.
2001 செப்டம்பர் 27 காலைப் பொழுது
மாற்று மருத்துவமுறைகளில் ஒன்றான யுனானி சிகிச்சையில் மருத்துவர் பட்டம் பெற்ற சிமி அகில இந்தியத் தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹி தனது இயக்கச் சகோதரர்களுடன் தில்லி அலுவலகத்தில் அளவளாவிக் கொண்டிருந்தார். உத்தரப் பிரதேசம் முழுவதுமாக இரண்டு வாரகாலம் நீண்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து விட்டு முந்தைய இரவே அவர் தில்லி திரும்பி இருந்தார். அவரது அலுவலகத் தொலைபேசி சிலமணி நேரங்களுக்கு முன்பு ஏதோ காரணத்தால் துண்டிக்கப்பட்டதால், அலுவலகத்திற்கு அருகிலுயுள்ள பொதுத் தொலைபேசி நிலையம் வழியாக நாட்டின் பலப் பகுதிகளிலுள்ள சிமி பொறுப்பாளர்களுடன் பேசி முடித்து விட்டு, அப்பொழுதுதான் வந்து அமர்ந்திருந்தார். மும்பை, லக்னோ, இன்தூர், கொல்கொத்தா, சென்னை, கோழிக்கோடு போன்ற இடங்களிலுள்ள இயக்க அலுவலகங்களை எவ்வித விளக்கமும் கூறாமல் காவல்துறை மூடி சீல் வைத்த விஷயத்தைப் பொறுப்பாளர்கள் ஃபலாஹியிடம் தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்திருந்தனர்.
இதற்கான காரணத்தை அன்று மாலை 4 மணிக்கே அவரால் அறிந்துக் கொள்ள முடிந்தது. "சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான 1967இல் இயற்றப்பட்டச் சட்டத்தை உபயோகித்து உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்விதம், மத்திய உள்துறை அமைச்சகம் சிமியை இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்ததாக"த் தொலைகாட்சியில் வந்த செய்தியைக் கண்டபொழுதுதான் அவருக்குக் காவல்துறையினரது நடவடிக்கைகளுக்கான காரணம் புரிந்தது. சிமியின் இலட்சியம் என்ன என்பது தெளிவாகி விட்டதாகவும் மாநில அரசுகள் நல்கிய விவரங்கள் இதனை உறுதிப் படுத்துவதாகவும் அன்று மாலை உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். சிமி நாட்டுப் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடியச் செயல்பாடுகளில் பரவலாக செயல்படுகின்றது எனவும் அது நாட்டின் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் தகர்ப்பதற்கும் நாட்டின் மதச்சார்பற்ற நிலைபாட்டைச் சிதைப்பதற்கும் வாய்ப்புண்டு எனவும் 6 பத்திகளிலான அரசு அறிக்கையில் கூறப்பட்டது. இவற்றை உறுதிப் படுத்தும் வகையில் சிமிக்கெதிரான உறுதியான ஆதாரங்களுடன் கூடிய வழக்குகள் அரசின் கைவசம் உண்டு எனவும் அவ்வறிக்கை கூறியது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களிலுள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு,
இந்தியாவின் ஒரு பாகத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என வாதம் செய்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது,
அகண்ட இந்தியாவின் நிலப்பரப்பு மீது கேள்வி எழுப்பியது,
சர்வதேச இஸ்லாமிய மயமாக்கலுக்காகச் செயல்பட்டது,
மதவெறியைத் தூண்டி விடுவதற்குச் சாத்தியமுள்ளதும் ஆட்சேபகரமானதுமான சுவரொட்டிகள்-கட்டுரைகள் வெளியிட்டது,
முஸ்லிம்களை ஜிஹாத் செய்வதற்குத் தூண்டியது
முதலியவை சிமிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள். அவற்றுள் மிகவும் அபாயகரமானது, இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்க சிமி முயல்கின்றது என்ற அரசின் வாதமாகும்.
(பாஜக ஆட்சியில் ஏறியவுடனேயே சிமி மீதான)தடை வரும் என்பதை சிமி தலைமையும் ஃபலாஹியும் அறிந்திருந்தனர். உண்மையில், அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த 2001 செப்டம்பர் 11 முதல் ஒரு மாத காலம், சிமிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் அத்வானி வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் அந்நேரத்திலேயே அத்வானியின் குற்றச்சாட்டுகளுக்கு ஃபலாஹி பதில் அளித்திருந்தார். அதற்கு முன்பு ஆகஸ்ட் 20 அன்று ஃபலாஹி அளித்திருந்த பத்திரிக்கைச் செய்தி (பாஜக அரசின் அநியாய செயல்பாடுகளுக்கு எதிராக), கடுமையான வாசகங்களுடன் அமைந்திருந்தது. அப்போதைய தினங்கள், சிமியின் தீர்க்கமான (அநியாயத்திற்கெதிரான) அறிக்கைகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தினங்களாக இருந்தன.
முஸ்லிம்கள் இனிமேலும் அவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொறுக்க மாட்டார்கள் என்றும் தங்களின் உரிமைகளுக்காக அவர்கள் தீர்க்கமான ஒரு போராட்டத்தை நடத்த விரைவிலேயே களமிறங்குவார்கள் என்றும் ஃபலாஹி (அப்பத்திரிக்கைச் செய்தியில்) கூறியிருந்தார். "அதிகரித்து வரும் இஸ்லாமிய எச்சரிக்கை உணர்வும் பாதுகாப்பு உணர்வும் சங்கபரிவாரத்தைக் கவலைக்குள்ளாக்குகின்றது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கும் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கும் மிகப் பெரியத் தடையாக அவர்கள் சிமியைக் கருதுகின்றனர்" என்றும் அவர் கூறியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியைக் குறித்து அதே செய்தியில், "1992 ல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு அத்வானியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்தான் முழுப் பொறுப்பாளர்கள்" என்று கூறியிருந்தார். 1990களில் அத்வானி நடத்திய ரத யாத்திரை இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை உருவாக்கி விட்டதையும் ஃபலாஹி அதில் சுட்டிக் காட்டினார். (இதே காலகட்டத்தில், பாபர் மசூதியைத் தகர்க்க சங்கபரிவாரம் முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டதாகவும் பின்னர், 1992இல் கரசேவை நடத்தப்போவதாக சங்கபரிவாரம் அறிவிக்கும் முன்னரே அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஆர்.எஸ்.எஸ் பாபரி மஸ்ஜிதைத் தகர்க்கப்போவதாகவும் சிமி தனது ஏடுகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூறிக் கொண்டிருந்தது.)
இன்றுவரை சிமிக்கு எதிராக கூறப்படும் ஒரு குற்றச்சாட்டுகூட நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அதேசமயம், கிறிஸ்த்துவர்கள், முஸ்லிம்கள், தலித்கள் ஆகியோர் மீது சங்கபரிவாரம் நடத்தும் திட்டமிட்டத் தாக்குதல்களைப் பல விசாரணை கமிஷன்கள் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்துள்ளன.
தடை உத்தரவை அறிந்த பின்னர் செப்டம்பர் 27 அன்று காவல்துறையினரின் வருகையினை எதிர்பார்த்து ஃபலாஹியும் அவருடன் மற்றும் மூன்று நிர்வாகிகளும் சிமி அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனர். அன்று நள்ளிரவு ஒரு டஜன் காவல்துறையினர் அலுவலகக் கதவை உடைத்துத் திறந்து அவர்களைக் கைது செய்து கொண்டு போனார்கள். அந்நிகழ்ச்சியைப் பற்றி, "எங்களுக்குக் கதவைத் திறப்பதற்கான வாய்ப்புகூடத் தராமல், கதவை உடைத்துத் தள்ளி உள்ளே புகுந்தனர்" என உத்தரபிரதேசத்திலுள்ள அவரது கிராமமான அஸங்கடில் வைத்து ஃபலாஹி தெஹல்காவிடம் கூறினார். ஃபலாஹி வேலை பார்ப்பதும் வசிப்பதும் இக்கிராமத்திலாகும். காவல் நிலையத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கும்வரை காவல்துறையினர் தங்களைத் தாக்கியதாகவும் அடித்து உதைத்ததாகவும் அவர் கூறினார். "நாடு முழுவதும் நடத்திய வேட்டையில் ஃபலாஹி உட்பட 240 க்கும் மேற்பட்ட சிமி உறுப்பினர்கள் கைது" செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Friday, October 10, 2008

சிமி தடை - தெஹல்கா விசாரணை அறிக்கை தமிழில்

சிமி தடை - தெஹல்கா விசாரணை அறிக்கை - 1.
வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்!
சிமியைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் கூறுபவை அனைத்தும் கலப்படமற்ற, படுசாமர்த்தியமான பச்சைப் பொய்கள் என தெஹல்கா நிருபர் அஜித் ஸாஹி அனாயாசமாக ஆதாரங்களுடன் நிறுவுகின்றார்.
படித்து மனம்வெறுத்துப் போய்விட வேண்டாம். இதுதான் இன்றைய இந்தியாவில் நீதி, காவல், அதிகார துறைகளின் அவலநிலை.
தெஹல்கா விசாரணை அறிக்கையின் முக்கிய பாகங்கள் இன்று முதல் இங்கு வெளியிடப்படுகின்றது.சப்தர் நாகோரி, அன்ஸார், அபூ பஷீர் அல்-காஸ்மி ஆகியோர், குஜராத் காவல்துறையால் அஹமதாபாத் குன்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ள இளைஞர்கள். இவர்களும் சதித் திட்டம் தீட்டிய இயக்கமாக முன் நிறுத்தப் பட்டிருக்கும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு என்ற சிமியும் திட்டமிட்ட, அபாயகரமான ஒரு துர்பிரச்சாரத்திற்கு பலிகளா?

முதலில் தெஹல்கா தலைமை எடிட்டர் தருண் தேஜ்பால் எழுதிய அறிக்கையின் முகவுரை குறிப்பு:

இந்திய அரசு என்பது நீதி மறுக்கப்பட்ட ஒரு அபாயப் பிரதேசம் என தெஹல்காவின் பரவலான பல விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.

சுர்ஜித் சிங் பென்டா என்பது அவர் பெயர். அவர் மரணமடைந்ததைக் கண்ட அனேகரில் நானும் ஒருவன். அது நடந்தது 1988ஆம் ஆண்டு. சாமர்த்தியமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தங்கக்கோயில் தடையினைத் தொடர்ந்து, கோயிலின் தெய்வீகப் பீடமான ஹர்மந்திர் சாஹிபில் ஒளிந்திருந்த அனைத்துத் தீவிரவாதிகளும் ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடைந்திருந்தனர். அங்கிருந்து அவர்களைக் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள சராயி பவனில் கொண்டு சென்று, அனைவரையும் வரிசையாகக் குனிய வைத்த நிமிடத்தில் திடீரென அந்த அசம்பாவிதம் நடந்தது.

காவல்துறை கண்காணிப்புக் குழு ஒரு முக்கியத் தீவிரவாதியை அடையாளம் கண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவன்மீது கைவைக்கும் முன்பே அந்நபர் சயனைடை விழுங்கினார். மருத்துவமனையில் சேர்க்கக் காவல்துறை அவரை ஜீப்பில் ஏற்றியது. ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்து விட்டிருந்தார். அவர் தான் சுர்ஜித் சிங் பெண்டா. பெண்டாவின் சோகக் கதை இங்குக் கூறப்பட வேண்டிய கட்டாயம் யாதெனில், அது கொடுமைப் படுத்தப்படுதலின் முறையைத் தெளிவாகக் காண்பித்துத் தருகின்றது.

1984 - இல் நடத்தப்பட்ட மிருகத்தனமான சீக்கியப் படுகொலையைக் காண்பதற்கு முன்புவரை அந்தச் சீக்கிய இளைஞர், புது தில்லிக்கான தேசிய விளையாட்டு வீரராக இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சயனைடு உண்டு தற்கொலை செய்யப்படும் கால கட்டத்திற்குள் 40க்கும் மேற்பட்டக் கொலை வழக்குகளில் அவரைக் காவல்துறை பிரதியாக்கியிருந்தது.

இந்தியத் திருநாடு பெண்டா மீது பிரயோகித்தத் தீவிரவாதப் பொய் குற்றச்சாட்டுகளும் அதனைக் காரணமாக வைத்து அவர் மீது பிரயோகித்திருந்த கொடுமைகளும் அவரைத் தீவிரவாதியாக்கியது. நாடு சுட்டிக்காண்பிக்கும் தீவிரவாதிகளின் கதைகள் பலவற்றிலும் இதுதான் நிலைமை. அரசு அதிகாரங்களின் அக்கிரமங்கள் தீவிரவாதம் செழித்து வளர்வதற்கு விதை விதைக்கின்றன. அதனைத் தொடர்ந்து அதனால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட இதுபோன்ற தனி நபர்களின் தீவிரவாதங்களும். நீதியை நடைமுறைப்படுத்துதப்படுவதில் சர்வாதிகார மனோபாவம் பல வேளைகளிலும் கடைபிடிக்கப்படுகின்றது.

அது இந்தியாவில் அபாயகரமாகும் விதத்தில் ஒவ்வொரு தினமும் மோசமாகி வருகின்றது. நக்ஸலைட்டுகள், அக்கிரமக்காரர்களாக மாறுவதற்கு முன்பு காவல்துறையின் இரைகளாக இருந்தனரே?. வடக்கிலும் கிழக்கிலும் காஷ்மீரிலும் இளம் தீவிரவாதிகளோடு மிருகத்தனமாக நடந்து கொள்ளப்பட்டதே?, அவர்களின் குணம் மிருகத்தனமாக மாறுவதற்கு முன்பு!. சாதாரண குடிமகனுடன் மோசமாக நடந்து கொள்ளப்பட்டதே? அவன் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பு!. காவல்துறையைப் பயத்துடன் காண்கின்ற - காக்கி உடை அணிந்த மனிதர்கள் நேர்மையாகச் செயல் படுவர் என ஒருவர்கூட நம்பிக்கை கொள்ளாத - ஒரு நாட்டைக் குறித்து ஒருவர் என்ன கூறுவார்?.

அனைவரும் கட்டாயமாகப் பேண வேண்டிய சமாதானமான ஒரு வாழ்க்கை முறைக்குப் பதிலாக தெய்வவிரோதமான கொள்கைகள், சகிப்புத்தன்மையற்ற, ஹிம்சை துவங்கிய அபாயகரமான சிந்தனைகளைச் சில இயக்கங்கள் கொண்டுள்ளன. சிமி அத்தகையதொரு இயக்கம் எனில், அது நம்முடைய ஆட்சேபணையையும் விமர்சனத்தையும் பெறத் தகுதியானதே. அது சட்டத்தை மீறவும் வேற்றுமைகளை மக்களிடையே வளர்க்கவும் செய்கின்றது எனில், அதனைக் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, அதைச் சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால் அதே சமயம் அது பரவலாகத் திட்டமிட்ட முன்முடிவுகளுடன் குறி வைக்கப்படுகின்றது என்றால் ...?, அந்த அமைப்புக்கு எதிரான அணுகுமுறை தவறான திசையில் பயணிப்பதும் அதிகமாகத் தீவிரவாதத்தை உருவாக்குவதற்காகத் திட்டமிட்ட சதி அப்பயண வழி நெடுகப் பின்னப் படுவதென்றால் ...? இரும்பால் இரும்பைத் துண்டாக்கலாம் என்றப் பழைய ஹிந்திச் சொல்வடையைப் போன்று, சில முன்முடிவுகளை வேறு சில முன்முடிவுகளால் அழிக்க இயலுமோ?.

சிமி தடை செய்யப்பட்டப் பின்னர், கடந்த 7 ஆண்டுகாலமாகத் தீவிரவாதச் செயல்பாடுகளின் மூலம் அரசைத் துடைத்தெறிவதற்கான சதியாலோசனைகளில் ஈடுபட்ட தேசவிரோத இயக்கம் தான் சிமி என்றக் குற்றச்சாட்டில் அரசாங்க ஏஜன்சிகள் உறுதியாக நிற்கின்றன. லஷ்கரே தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷே முஹம்மத் முதலான பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களுடன் அதற்குத் தொடர்பு உண்டு எனவும் கூறுகின்றன. இரண்டு வருடத்திற்கு முன்பு மும்பையில் 187 பேர் கொல்லப்பட்ட இரயில் குண்டு வெடிப்பு உட்பட இந்திய மண்ணில் நடந்த அதிபயங்கரமான அனைத்துத் தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளிலும் சிமி உறுப்பினர்கள் எனக் காவல்துறையால் கூறப்படுபவர்கள் குற்றம் சாட்டப் பட்டுள்ளனர்.

ஆனால், தெஹல்கா நடத்திய மூன்று மாத கால, நீண்ட - இந்தியா முழுவதுமான - விசாரணையில், இதில் அதிகமான வழக்குகள், நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சேபகரமானதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் பிசாசு வேட்டையின் வாசம் வீசக் கூடியதுமாகும் என்பது உறுதியாகின்றது. இதற்குக் காவல்துறை மீதும் புலனாய்வுத் துறைகளின் மீதும் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல என்பதுதான் அவமானகரமானது. மாறாக, நீதி, நிர்வாக நடவடிக்கைகள்கூட பலவேளைகளிலும் பயங்கரமான முறையில் நீதி மறுக்கப்படும் விதத்தில் அமையப் பெற்றுள்ளன.
***
அஜித் ஸாஹியின் அதிமுக்கியமான, அதிர்ச்சிகரமான இந்த அறிக்கை, சிமி உறுப்பினர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு எதிரான, அதி முக்கிய, பயங்கர வழக்குகளின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியளிக்கக் கூடிய சதிவலைப் பின்னலை விவரிக்கின்றது. இவ்வழக்குகளோ, அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை; குற்ற விசாரணைகளின் சாதாரண அடிப்படை நடைமுறை நடவடிக்கைகள்கூட மறுக்கப்பட்ட வழக்குகள்; இந்திய இளம் தலைமுறையினருடைய வாழ்க்கையை, அவர்களுடைய குடும்பங்களுடைய வாழ்க்கையை ஈவிரக்கமின்றிக் கசக்கி எறியும் வழக்குகள்.

இந்திய அரசாங்கம் மிகக் கவனமாக அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். கடந்தப் பல ஆண்டுகளாக, சர்வதேச ஒத்த நிகழ்வுகளால் உற்சாகமூண்ட அரச நடவடிக்கைகளும் அநியாயங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு முன்முடிவுடன் கூடிய செயல்பாடுகள் அதிகரிப்பதைக் காட்டுகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பாலிவுட்டின் பெரும்பாலான வில்லன்களும் இஸ்லாமியவாதிகளாக வார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் 16 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும்; இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடு நம் இந்தியாவாகும். இவர்களில் ஒரு 10,000 பேர் புரட்சியாளர்களாக இருந்தால் கூட, அது ஒரு பெரும் தோப்பிலுள்ள ஒற்றை மரத்தை ஒத்ததாகும்.

இவ்வினத்தை முழுவதும் அலங்கோலப் படுத்தக்கூடிய சூழலை உருவாக்குதல் மடத்தனமானது. இச்சமுதாயம் முழுவதுமே தடை செய்யப்பட்டவர்கள்(கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்) என்பது போன்ற எண்ணத்தை மக்கள் மனதில் வலிந்து விதைப்பது அபாயகரமானது. அந்தச் சமுதாயம் சமாதானமாக வாழ்வதற்கான மாற்று வழிகளைத் தேடுவதற்கு முன்பு நமது அரசாங்கம் தனது செயல்பாடுகளில் அவசரகதியிலான ஒரு சுயபரிசோதனை நடத்த வேண்டியது கட்டாயமாகும்.

வில்லியம் பாக்னர் இவ்வாறு கூறினார்: "முன்முடிவுகள் மிகவும் நாசகரமானதாக மாறுவது, அது சர்வதேச மயமாக்கப்படும் போதாகும்.!".

அது போன்றதொரு அபாயம், ஒளிர்கின்ற இந்தியாவுக்கு உண்டு என்பதை, தெஹல்காவின் விரிவான விசாரணைகள், தேடல்கள், ஆய்வுகள் அப்பட்டமாகச் சுட்டிக்காண்பிக்கின்றன.
நன்றி : satyamargam.com
இன்ஷா அல்லாஹ் தொடரும்...